பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த இயலும்

  • Dr.Venkatesh
  • Feb 10, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த இயலும்

அதிதி மூளை நரம்பியல் கிளினிக் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் டாக்டர். வெங்கடேஷ் அவர்கள் நரம்பியல் துறையில் சில முக்கிய சிகிக்சைகளைப் பற்றி நமக்கு விளக்கமளிக்கிறார்.

நரம்பியல் கோளாறுகள் என்றால் பக்கவாதம், வலிப்பு நோய், கை கால் அசைக்க இயலாமை, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, ஆட்டிஸம், ஏடிஹெச் டி என பலவற்றை குறிப்பிட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால் தலைவலி என்பது நரம்பியல் தொடர்பான மிக முக்கியமான பிரச்சினை. தலைவலி வந்தால் பெரும்பா லான நோயாளிகள் நரம்பி யல் மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை. பொது மருத்துவர்களையே சந்தித்து நிவாரணம் பெறுகிறார்கள். ஆனால் தலைவலி என்று வந்துவிட்டால் முதலில் நீங் கள் நரம்பியல் மருத்துவர் களை சந்தித்து ஆலோசனை பெறுவது தான் சிறந்தது.

ஏனெனில் தலைவலி என்பது 99 சதம் நரம்பியல் கோளாறுகளினால் தான் ஏற் படுகிறது. அதே போல் வேறு சிலர் தலைவலிக்காக கண் மருத்துவர்களையும் சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள். இதுவும் தவறு. அதே சமயத் தில் நரம்பியல் மருத்துவர் களை அணுகியிருந்தால் அவர்கள் துல்லியமாக இதன் மூல காரணம் என்ன என் பதை கண்டறிந்து சொல்வார் கள். அத்துடன் அதற்கான தீர் வையும் முன்வைப்பார்கள்.

தலைவலிகளில் ஏராள மான வகைகள் உள்ளன. இதில் மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற்றைத்தலை வலியால் பாதிக்கப்படுபவர் கள் தான் அதிகம். 100 பேர் தலைவலியால் அவதிக்குள் ளானால் அதில் 75 சதவீத பேர் இந்த ஒற்றைத்தலைவலி யால் பாதிக்கப்பட்டிருப்பார் கள். இதை மிக எளிய முறை யில் தீர்க்கமுடியும். இந்த விழிப்புணர்வு முதலில் பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும்.

அதே போல் வலிப்பு வியாதி குறித்தும் மக்கள் பெருவாரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர் களைப் பொறுத்தவரை இரண்டு கைகளும், இரண்டு கால்களும் வெட்டி வெட்டி இழுப்பது தான் வலிப்பு வியாதி என்று எண்ணியிருக் கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வலிப்புகளில் ஏராளமான வகைகள் உண்டு.  ஒரு கையும் காலும் வெட்டி வெட்டி இழுப்பதும் வலிப்பு தான். கண்கள் அப்படியே ஒரேயிடத்தில் நிலை குத்தி நிற்பதும் வலிப்பு தான். சில நேரங்களில் நம்முடைய பிள்ளைகள் எதையாவது எழுதிக் கொண்டிருக்கும் போது, அதை நிறுத்திவிட்டு  கனவுலகில் சஞ்சரிப்பது போல் அப்படியே நிலை குத்தி இருப்பார்கள். இதுவும் வலிப்பு நோயே. அதே போல் சிலர் நன்றாக நடந்து கொண்டிருப்பார்கள். திடீ ரென்று சமநிலை தவறி கீழே விழுந்துவிடுவார்கள். இதுவும் ஒரு வகையான வலிப்பு நோய் தான். அதே போல் வேறு சிலர் மின்சாரம் ஷாக் அடித்தது போல் அப்படியே ஒரு சில விநாடிகள் நின்று விடுவர். இதுவும் ஒரு வகையான வலிப்பு தான்.  இதனால் உங்களுக்கு ஏதேனும் வலிப்பு குறித்த அறிகுறி இருந்தால் உடனடியாக நரம்பியல் மருத்துவர்களை சந்திக்கவும்.

பக்கவாதத்தால் பாதிக்கப் பட்ட ஒரு நோயாளியை அவர் பாதிப்புக்குள்ளான நான்கரை மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்றால் அடுத்த நாளே நீங்கள் முழுமையாக குணமடைய இயலும். இதற்கான நவீன கருவிகளும், மருந்துகளும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சிகிச்சை சற்று கூடுதலான கட்டணத்துடன் இருந்தாலும் முழுமையாக குணப்படுத்த இயலும் என்பது உறுதி. இதனை அலட்சியப்படுத்தினால் வாழ்க்கை முழுவதிற்கும் இதன் பாதிப்புடன் தான் இருக்க வேண்டிய திருக்கும்.

பர்க்கின்ஸன் வியாதி அதாவது நடுக்குவாத வியாதி, வயதானவர்களை அதிகமாக பாதிக்கும் நோயாகும். அதிலும் 60 வய திற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஏதேனும் ஒரு பகுதி மட்டும் லேசாக நடுக்கம் காணத் தொடங்கும். இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நரம்பியல் மருத் துவ சிகிச்சையைப் பெற்றால் பின்னால் எந்தவொரு பெரிய பாதிப்புக்கும் இடம் கொடுக்க நேராது. இதனை தொடக்க நிலையில் அலட் சியப்படுத்தினால் ஒரு கையி லிருந்து இரண்டாவது கைக் கும் இது நீளும். அதன் பிறகு எல்லா இயக்கங்களும் மெதுவாக நடைபெறும். அடிக்கடி கீழே விழுந்து விடு வார்கள். ஞாபக மறதி அதிக மாகிவிடும்.

குழந்தைகளுக்கு ஏற் படும் ஏடி ஹெச் டி பாதிப்பு குறித்தும் ஏராளமானவர் களுக்கு தெரிவதில்லை. இதனை மருந்துகள் மற்றும் போதிய அரவணைப்பின் மூலம் முழுமையாக குணப் படுத்திவிட இயலும். அதன் பிறகு அவர்களும் மற்றவர்க ளைப் போல் பாட சாலைக்கு செல்வதோ அல்லது மேல் நிலைக் கல்வியை தொடர வோ இயலும். அதேபோல சில மருத்துவர்கள் உங்கள் குழந்தையை சோதித்து சத்து குறைபாடு இருக்கிறது. அதனால் தான் மூளை வளர்ச்சி குறைவாக இருக் கிறது என்று சொன்னால், அதை முழுமையாக நிராகரித் துவிடுங்கள். ஏனெனில் சத்து குறைப்பாட்டால் மூளையின் வளர்ச்சி பாதிக்கப்படாது. அதனால் இதற்கு சத்து மாத்தி ரைகள் மட்டும் தீர்வாகாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகள் அனைத்தும் ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்களா?

இல்லையில்லை. இதில் இரண்டு பிரிவுகள் இருக்கி றது. ஓவர் ஆக்டிவிட்டி என்பது வேறு, ஹைப்பர் ஆக்டிவிட்டி என்பது வேறு. நார்மலான குழந்தைகள் சற்று துறுதுறுவென அந்த வயசுக் குரிய குறும்புத்தனத்தை செய் யும். அதனை  அனுமதிக்க வேண்டும். இவர்கள் சூழல் மாறிவிட்டால் தங்களின் நட வடிக்கைகளை மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

ஹைப்பர் ஆக்டிவிட்டியு டன் இருக்கும் குழந்தைகளை இனம் கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தவில்லை யெனில் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன வேண் டுமானாலும் நேரலாம். இவர் கள்  பெரும்பாலும் சமூக விரோத சக்திகளாக பன்னி ரண்டு வயதிலேயே மாறத் தொடங்கி விடுவார்கள். கெட்ட பழக்க வழக்கங்க ளுக்கு எளிதில் ஆட்பட்டு விடுவார்கள். இதனால் இவர் களை தொடக்க நிலையி லேயே அதாவது இரண்டு அல்லது மூன்று வயதிற்குள் சிகிச்சையை தொடங்கிவிட்டால் அவர்கள் விரைவில் குணமடைந்துவிடுவார்கள்.

எம்போலத்தெமி சிகிச்சை குறித்து..?

பக்கவாதம் வந்து நான் கரை மணிக்குள் கடந்து எட்டு மணி நேரத்திற்குள் நரம் பியல் மருத்துவச் சிகிச்சை யைப் பெறத் தொடங்கினால் அவர்களை குணப்படுத்த உதவும் சிகிச்சைக்கு பெயர் தான் எம்போலத்தெமி சிகிச்சை. இதன் மூலமாக நோயாளியின் பக்கவாத பாதிப்பை குறைக்க முடியும். அதையும் கடந்து அதாவது எட்டு மணி நேரத்தையும் கடந்து வந்தால் மூளை வீக்கத்திற்குரிய சிகிச்சையை மட்டும் தொடர்ந்து செய்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவோம். இதன் மூலம் முளையில் பாதிப்பு ஏற்படா மல் தடுக்க இயலும்.

மூளையில் அறுவை சிகிச்சை எப்போது அவசியமாகிறது?

பக்கவாதம் வந்து மூளை யின் ஒரு பக்கம் வீக்கம் அதிகமாகியிருந்தாலோ அல் லது அந்த வீக்கமானது மற் றொரு பக்க மூளையினை அதிகளவில் அழுத்தத் தொடங்கினாலோ நோயா ளிக்கு அறுவை சிகிச்சை அவ சியப்படலாம். வேறு சில ருக்கு மூளையில் கட்டி ஏதே னும் ஏற்பட்டிருந்தால் நிலை மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.

தொடர்ச்சியாக கணினி யின் முன் வேலை செய்பவர் களுக்கு நரம்பியல் அழுத்தம் எங்கு ஏற்பட்டிருக்கிறது என் பதை கண்டறிந்து அதற்குரிய மருந்துகள் மூலமே இதனை குணப்படுத்தி விட முடியும்.

ஆலோசனைக்கு: 9500964472