கணினி மயத்தால் பாதிக்கப்படும் கண்கள்!

  • Dr.Thirumalai Kumar
  • Feb 08, 2018
Appointment                Doctor Opinion          
 
கணினி மயத்தால் பாதிக்கப்படும் கண்கள்!

கண்கள் நம் வாழ்க்கைப் பாதைக்கு தீபம் என்றே சொல்லலாம். கண்கள் இல்லாமல் செயல்படுவதென்பது மிகவும் கடினமான காரியம். இன்று இருக்கும் சிறு பிள்ளைகள் தாங்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் முன்னரே கண் மருத்துவமனையில் அனுமதி பெற்று விடுகிறார் கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சி, மனிதனின் ஆரோக்கியத்தின் வீழ்ச்சியா?

கண்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனைக் குறித்தும் கண்களின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்துக் கொள்ளவும்.

உலக முழுவதும் கண்களுக்கு தரமான சிகிச்சையளித்து வரும் வாசன் கண் மருத்துவமனையின் மதுரை அண்ணாநகர் கிளையின் சிறப்பு கண் மருத்துவர். திருமலை குமரன் அவர்களை சந்தித்தோம்.

இன்று குழந்தைகளும் பெண்களும் டிவிகளிலும், கணினியிலும், ஸ்மார்ட் போன்களிலும் அதிக நேரம் செலவளிக்கிறார்கள், அதன் விளைவுகள் என்ன?

டிவியை மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிவியைவிட தற்போது உள்ள கணினி மற்றும் ஸ்மார்ட் போன்கள்தான் மிகவும் கேடானது. நாம் தொலைகாட்சியை துõரத்தில் இருந்து பார்ப்போம். 

ஆனால் கணினியை நாம் மிகவும் அருகில் பயன்படுத்துகிறோம். மேலும் நாம் அதில் எழுத்துக்களாக தான் பார்க்கிறோம். நாம் அதை கூர்ந்து கவனிக்கும் போது அவை கண்களுக்கு அழுத்தத்தை தருகிறது. மேலும் கணினியிலிருந்து வரும் கதிர்கள் மற்றும் வெப்பம் நம் கண்களை தாக்குகிறது.

இன்று அனைத்துமே கணினி மயமாகிவிட்டது, கணினி சம்பந்தமான பணியில் இருப்பவர்களுக்கு என்ன பிரச்சனைகள் தோன்றும்?

கணினியில் பயணி யாற்றுவோரை கவனித்தால் அவர்கள் கண் சிமிட்டுவது மிகவும் குறைவாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 16-20 முறை கண் சிமிட்டல் இருக்கவேண்டும். ஆனால் கணினியில் வேலைப்பார்க்கும் போது அது 5 அல்லது 6 ஆக குறைகிறது. நம்முடைய கண்களில் சரியான அளவில் சிமிட்டல்கள் இருந்தால்தான் கண்ணீர் சமமான பரவும்.

நம் கண்களை தொடர்ந்து சிமிட்டாமல் இருக்கும் போது, கண்ணீர் முழுமையாக வற்றிப்போகும், நாம் கணினியை தொடர்ந்து பார்க்கும் போது அது நமக்கு தலைவலி போன்றவற்றை வரவைக்கிறது. இதை Computer Vision Syndrome என அழைப்போம். கணினிக்கும் நம் கண்களுக்கும் நம்முடைய கை தூரம் இருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும்போது கண்களை சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது தான் கண்ணில் அழுத்தம் குறையும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 நொடிகள் வரை கண்களை முடிக்ககொள்ள வேண்டும். அப்போது கண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

கைபேசியால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

கைபேசி என்பது ஒரு வரம் என எல்லாரும் நினைப்பார்கள், நாங்கள் அதை சாபம் என்றே சொல்லுவோம். கணினியை விட, கைபேசி நம் கண்களுக்கு மிக அருகில் சொல்கிறது. இது கண்களுக்கு அழுத்தம் கணினியை விட அதிகமாக அளிக்கிறது. அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. 

கைபேசியை தொடர்ந்து பயன்படுத்தும் போது அது நம் பார்வை குறைக்கும் நிலைக்கு தள்ளும் அபாயமும் உள்ளது.

லேசர் சர்ஜரி செய்துக் கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும்?

18 வயது புர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும், ஒரு ஆண்டு காலத்துக்கு அவர்களுடைய கண்களில் பவர் கூடாமலும் குறையாமலும், நிலையாக இருக்கவேண்டும். இது இரண்டு மட்டுமே போதுமானது.

கண்களில் லென்ஸ் பயன்படுத்தினால் எதும் பிரச்சனைகள் ஏற்படுமா? லென்களை எவ்வாறு கையாள வேண்டும்?

லென்ஸ்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். நகங்கள் வளர்க்க கூடாது. லென்ஸ்சை சுத்தமாக வைக்க வேண்டும், லென்ஸ்கேஸசை தினமும் சுத்தம் செய்வது நல்லது. இதை சரியாக கடைப்பிடித்தால் எந்தவிதமான பிரச்சனையும் வராது.

இங்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கின்றனர்?

இங்கு லேசிக் என்னும் லேசர் சர்ஜரி, கேட்ராக்ட், ரேட்டினல் டிடாச்மண்ட், க்ளேக்கோமோ சர்ஜரி போன்றவைகள் செய்கிறோம். கண்கள் என்பது ஒரு பொக்கிஷம், அதை பாதுகாப்பதும், அதை அழித்துக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.