அழகிற்கு அழகூட்டும் நவீன சிகிச்சைகள்!

  • Dr.Ramasamy
  • Mar 15, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
அழகிற்கு அழகூட்டும் நவீன சிகிச்சைகள்!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அதிக முக்கியத்துவம் கொடுப்பது அழகுக்குதான். அந்த அழகிற்கே அழகு சேர்க்கும் விதமாக இன்றைய தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டது.

அன்றைய காலகட்டங்களில் முக அழகு சீர்கெடும்பொழுது, அதுதான் கதி என மக்கள் இருந்தனர், ஆனால் இன்று முகத்தையே நமக்கு பிடித்த வண்ணம் மாற்றிக்கொள்ளும் அளவிற்கு மருத் துவம் உள்ளது, இதனை கருத்தில் கொண்டு, மதுரையின் சிறந்த அழகு அறுவை சிகிச்சை மருத்துவர் திரு. ராமசாமி அவர்களிடம் இதற்கான விடைகளையறிய Medical Online நடத்திய நேர்காணல் இதோ.

மருத்துவத்தில் எவ்வளவோ துறையிருந்தும் ஏன் அழகு சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

இத்துறையை நான் ஒரு கலையாக கருதுகிறேன், மற்ற அறுவை சிகிச்சையைப் பார்த்தால் கல்லடைப்பு, குடல் வால் அறுவை சிகிச்சைகளில் வெளிப்புறத்தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது, நோயாளிகளுக்கு அந்த பிரச்சனையிலிருந்து மட்டும் விடுதலை அடைந்திருப்பர், ஆனால் இது அப்படி அல்ல, சிலருக்கு தங்கள் அன்றாட வாழ்வில் பிரச்சனைகள் இரு க்கும், முகத்திலே காயங்கள், தழும்புகள், பெண்களுக்கு உடலில் உள்ள பிரச்சனைகள், ஆகியவை குணமாக்கப்படுகிறது, எனவே அவர்கள் சமுதாயத்தில் அப்பிரச்சனை இல்லாமல் தன்னம்பிக்கையுடன் வெளியில் செல்ல முடியும். இது மிகவும் ஆர்வமான துறையெனவும் சொல்லலாம்.

இந்த அறுவை சிகிச்சை மூலமான எந்த வகையான பிரச்சனைகளை தீர்க்க முடியும்?பொதுவாகவே மக்களிடையில் பிளாஸ்டிக் சர்ஜரி என்றாலே தழும்பை மறைப்பது, மூக்கை சரி செய்வது என்றே மக்கள் பெரிதும் நினைக்கின்றனர், ஆனால் அதற்கும் மேலாக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை சீரமைத்தல், தோல்களில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துதல் போல அனேக நோய்களை குணப்படுத்த முடியும், அன்றைய கால கட்டங்களில் புகையிலையால் ஏற்படும் புற்றுநோய்க்கு, பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள தோலை நீக்கி, அப்படியே மீதமுள்ள சதையின் மூலம் தைத்துவிடுவர், ஆனால், இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம், முகத்தில் சிறிய தழும்புக்கூட இல்லாத அளவிற்கு குணப்படுத்த முடியும். 

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து மக்களிடையே எந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது?

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து தற்பொழுது மக்களிடையில் நல்ல விழிப்புணர்வு உள்ளது, மக்களிடையில் பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் தங்கள் அழகினை பாதுகாக்க முடியும் என அறிந்துள்ளனர்.

தற்சமயம் ஆண்கள் அழகுக்கான அறுவை சிகிச்சை அதிகம் செய்கிறார்களா அல்லது பெண்கள் அதிகம் செய்கிறார்களா?

முன்பு பெண்கள் அதிகமாக செய்தனர், தற்பொழுது ஆண்களும் அதிகம் செய்கின்றனர், ஆண்கள் தங்கள் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது, தொப்பை உள்ளது, தலைமுடி குறைவாக உள்ளது என அதற்கும் சிகிச்சை பெறுகின்றனர்.

நீங்கள் என்ன பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கின்றீர்கள்?

இங்கு எல்லா வகையாக அழகு அறுவை சிகிச்சை செய்கிறோம், முக்கியமாக Liposuction, Lipoabdominoplasty, Hair Transplanting, Breast Silicon Implant, Breast Reduction, Nose correction என அனைத்தும் செய்கிறோம். 

அழகு அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?

அது ஒவ்வொருவருக் கும் ஒவ்வொரு விதமாக அமையும், Hair transplant-க்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற விரும்பினால், தலைமுடி வளர ஒரு வகையான எண்ணெய் பயன்படுத்துவர், அதை ஒரு வாரத்திற்கு முன்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும், குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்களை கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும், ஏனென்றால் புகைப்பிடித்தல் மூலம், புண்கள் சீக்கிரம் ஆறாது. Lipoabdominoplasty செய்கிறோம் என்றால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் கண்டிப்பாக நாங்கள் கூறும் உணவை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் அவர்களால் அழகைப் பாதுகாக்க முடியும்.

தொப்பைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த பின் மீண்டும் அவர்களுக்கு தொப்பை போட வாய்ப்புள்ளதா?

Liposuction மட்டும் செய்து, Unbalanced Diet ஆக சாப்பிட்டார்கள் என்றால் மீண்டும் தொப்பை போட வாய்ப்புள்ளது, எனென்றால் Liposuction கொழுப்பை மட்டும் நீக்குவோம், ஆக Unbalanced Diet ஆக சாப்பிட்டார்கள் என்றால் பழைய படி இருக்காது, ஆனால் ஓரளவிற்கு தொப்பை போட வாய்ப்புள்ளது.

40 வயதிற்கு மேல் தங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி அழகை காக்க வழியுள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது, அவர்களுக்கு Botox Injection போடலாம், முகம் முழுவதும் சுருக்கங்கள் இருந்தால் Face Lift surgery செய்து கொள்ளலாம், சர்ஜரி வேண்டாமென கூறுபவர்களுக்கு Laser மூலமாக சரி செய்யலாம்.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?

Lipoabdominoplasty பொறுத்தவரையில் இரண்டு பக்கங்களும் சரிசமமாக இருக்காமல் போகலாம், ஆனால் அந்த வித்தியாசம் பெரிதளவில் தெரியாது, Liposuction பொருத்தவரையில் half cm அளவில் துளையிட்டு கொழுப்பை வெளி எடுப்போம், சிகிச்சை முடிந்ததும் ஒரு வாரம்வரை நீரைப் போல கொழுப்பு அத்துளையின் வழியாக வரும், சிறிது நாள் வலியிருக்கும், face Lift Surgery செய்யும் போது காதைச் சுற்றி ஒரு Suture line வரும் அது வெளிநாட்டவர்களுக்கு பெரிதளவில் தெரியாது, இங்கு 99% தெரியாத அளவிற்கு அறுவை சிகிச்சை செய்வோம், ஒரு சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. Face lift செய்பவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தால் அதை முழுவதாக நிறுத்திவிடவேண்டும், இரத்த கொதிப்புள்ளவர்கள் இரத்தம் உறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

இங்கு நாங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

மக்களுக்கு தரமான சேவையை நியாயமான கட்டணத்தில் வழங்குவதே எங்களின் இலக்கு. இங்கு நாங்கள் Abdominoplasty, Breast reshaping and Implants, Hair transplant, Nose Correction, Facial Rejuvenation,, Mole removal, Birth Deformities, Brachial Plexus Injuries, Cleft Lip and Palate, Ear Correction, Hand and Microvascular surgery ஆகியவற்றினை சிறந்த முறையில் செய்கிறோம்.