பத்தியம் இருப்பதால் நோய் விரைவில் குணமாகும்!

  • Dr.Yoga Vidhya
  • Jan 03, 2018
Appointment                Doctor Opinion          
 
பத்தியம் இருப்பதால் நோய் விரைவில் குணமாகும்!

நாம் ஒவ்வொருவரும், நம்முடைய உடலுக்கு சிறிய அளவில் பாதிப்பு என்றால் ஏதேனும் ஒரு கை வைத்தியத்தை செய்துவிட்டு, அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதபோதுதான் மருத்துவர்களை நாடுகிறோம்.

நாம் செய்யும் கை வைத்தியம் தான் சித்த வைத்தியம் என்பதை நாம் தெளிவாக உணரவில்லை. சித்தர்கள் என்னும் எம்முடைய முன்னோர்கள், மனித குலத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு, தங்களது சக்தியாலும், அனுபவத்தாலும் உருவாக்கிய மருத்துவ சிகிச்சை முறைதான் சித்த மருத்துவம். இந்த சித்த மருத்துவத்தில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்னும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. இந்நிலையில் சித்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்று, பலநுட்பமான உடலியல் சிக்கல்களுக்குரிய தீர்வினை வழங்கிக் கொண்டிருப்பவரும், சென்னையில் இயங்கிவரும் எத்னிக் ஹெல்த்கேர் என்ற மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டொக்டர் பி.யோகவித்யாவை சந்தித்தோம்.

எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உண்டு என்கிறீர்களே.. தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் சிகிச்சை உண்டா?

இதற்கான சிகிச்சை முறையைக் கண்டறிந்து தருமாறு அரசாங்கமோ அல்லது சுகாதார நிறுவனங்களோ கேட்டுக்கொள்ளவில்லை. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எங்கள் மருத்துவத்தை இதுவரை நாடவில்லை. கபசரம், விஷசுரம் என்ற இரு பிரிவுகளை சித்த மருத்துவம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த இரு பிரிவுகளில்தான் பன்றிக்காய்ச்சல் இடம் பெறுகிறது. சிறிது காலத்திற்கு முன் சிக்குன்குன்யா என்ற நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கமே சித்த மருத்துவ முறையால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை களை ஏற்று, மக்களை அதிலிருந்து விடுவித் தது. அதேபோல் பன்றிக் காய்ச்சலுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை உண்டு. ஆனால் அதற்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் முழுமையாக வழங்கவில்லை. வழங்கினால் பன்றிக் காய்ச்சலுக்கான நிவாரணத்தையும் சித்த மருத்துவம் வழங்கும். பொதுவாக யாருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்கள் தான் காற்றினால் பரவும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். எனவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதி கரித்துக்கொண்டாலே போதுமானது.

மாற்று மருத்துவ சிகிச்சை முறையான சித்த மருத்துவத்தை மக்கள் தங்களின் முதன்மையான தெரிவாக வைத்துக் கொள்வதில்லையே ஏன்?

முதலில் சித்த மருத்துவத்தை மாற்று மருத்துவ சிகிச்சை முறை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் சித்த வைத்தியம் ஒரு சிகிச்சை முறையல்ல. நம் மண்ணின், மக்களின் வாழ்க்கை முறை. ஒருவர் எப்படி நோயற்று, ஆரோக்கி யமாக வாழவேண்டும் என்பதற்கான வழி காட்டிதான் சித்த மருத்துவம். மக்கள் தங்களுக்கு ஏற்படும் எல்லாவித உடலியல் சிக்கல்களுக்கும் அலோபதி முறையில் சிகிச்சை மேற்கொண்டு, எதிர்பார்த்த பலன் கிடைக்க ததருணத்தில் தான் மாற்றுமருத்துவத்தை நாடுகிறார்கள். இது இன்றைய போக்கு. ஆனால் அவர்களுக்கும் மற்ற எந்த சிகிச்சை முறை பலனளிக்காவிடினும் சித்த மருத்துவம் கைகொடுக்கும் என்று வைத்திருக்கும் நம்பிக்கைதான் எங்கள் ஆதாரம். அதற்கா கத்தான் தொடர்ந்து சேவையாற்றி வருகிறோம்.

மகப்பேறு துறையில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு என்ன என்று கூற இயலுமா?

இன்றைக்கு அதிகரித்து வரும் மகப்பேறின்மைக்கான சிகிச்சையில் சித்த மருத்து வம் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது. திருமணமாகி ஓராண்டிற்குள் மகப்பேறு கிடைக்காத தம்பதிகள், மற்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றி, எதிர்பார்த்த பலன் கிடைக்காமல், அதன் பிறகு சித்த மருத்துவ நிபுணர்களை நாடுகிறார்கள். ஆனால் முன்பே நாடினால் எதிர்பார்த்ததை விட அதிகமான பலன் கிடைக்கும் சாத்திய முண்டு. ஒழுங்கற்ற மாதவிடாய், மாத விடாய் தொடர்பான கோளாறுகள், கரு முட்டை உற்பத்தியின்மை, கரு முட்டை உற் பத்தியில் உருவாகும் சிக்கல்கள், தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற தன்மை, இரத்தச் சோகையினால் மகப்பேறில் உண்டாகும் தடைகள், விந்து உற்பத்தியில் உள்ள இடை யூறுகள் எனப் பலவகையான சிக்கல்களுக் கும் சித்த மருத்துவம் முழுமையான பல னைத் தரவல்லது. சித்த மருத்துவம் செயற்கை முறை கருவூட்டல் முறையிலான குழந்தை பிறப்பைப் பரிந்துரைப்பதில்லை. அதற்கு மாற்றாக தொடர்ச்சியான சிகிச்சையின் மூலம் ஒழுங்கான மாதவிடாய், வலுவான கருமுட்டை உற்பத்தி, ஆரோக்கிய மான கர்ப்பப்பை, பேறு காலத்தை எதிர்கொள்ளக் கூடிய சக்தி எனப் பெண்களுக்கும், விந்து உற்பத்தி அதிகரிப்பு, ஆரோக்கியமான விந்து, தாம்பத்தியத்தில் குறைபாடின்மை என ஆண்களுக்கும் கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் அவர்களுக்கான மகப்பேற்றை உறுதி செய்கிறது.

உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையை மட்டுமே சித்த மருத்துவம் மேற்கொள்கிறது என்றும், இந்த முறை அனைத்து நோய்களுக்கும் பொருத்தமாக இருப்பதில்லை என்றும் கூறுகிறார்களே.. இதனைப் பற்றி..?

மூட்டு வலியால் அவதிப்படும் ஒருவர், அருகிலுள்ள அலோபதி மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செல்கிறார். அவருக்கு உடனடியாக வலி நிவாரணி வழங்கப்படுகிறது. வலி குறைந்து விட்டதாகவும், அதிலிருந்து விடுபட்டு விட்டதாகவும் நோயாளி கருதுகிறார். ஆனால் மூட்டுவலி குறையவில்லை. ஏனெனில் மூட்டுவலிக்கான மூல காரணத்தை ஆராயாமல் வழங்கப்படும் சிகிச்சை அது. இதனால் மூட்டுவலி, மூட்டுத் தேய்மானமாகவோ அல்லது மூட்டுக்கான ஆரோக்கியத்தில் குறைபாட்டையோ உருவாக்கிவிடக் கூடும். ஆனால் சித்த மருத்துவத்தில், நோய்க்கான மூல ஆதாரமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, அதனூடாக நோயை குணப்படுத்தத் தூண்டுகிறது.

பத்தியம் ஏன் அவசியமாகிறது?

பத்தியம் என்பது ஆங்கில மருத்துவம் வழங்கும் வலி நிவாரணியைப் போன்றது. அதாவது ஒருவருக்கு நோயை விரைந்து குணப்படுத்த, பத்தியம் அவசியமாகிறது. சித்த மருத்துவம், உணவே மருந்து என்ற கொள்கையைப் பின்பற்றுவதால் பத்தியத்தை வலியுறுத்துகிறது. ஆங்கில மருத்துவர்களே தற்போது நீரிழிவு நோயாளிகளுக்குப் பத்தியத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறார்கள். பத்தியம் இருப்பதால் நோய் விரைவில் குணமாகும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கில மருத்துவம் போல் சித்த மருத்துவம் பொதுமைப்படுத்தப்படவில்லையே ஏன்?

உணவுப் பழக்க முறையில் உள்ள வேறு பாடுகள், பருவ நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட பல அடிப்படையான விஷயங்களைக் கருத்திற்கொண்டுதான் சித்த மருத்துவம் பொதுமைப்படுத்தப்படவில்லை என எண்ணுகிறேன்.

இடுகாடுகளுக்கு அருகில் இருக்கும் சிறிய ஆலயங்களில் புகையிலையாலான சுருட்டை வைத்து வழிபடுவதையும், சித்தர்கள் கஞ்சா, மது போன்றவற்றை உபயோகப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் என்பதையும் பற்றி பலர் செவி வழியே கூற கேட்டிருப்பீர். இதில் உள்ள சில மருத்துவ உண்மைகளைப் புரிந்துகொள்ளுங்கள். மரணித்த உடலை எரிக்கும்போதோ அல்லது புதைக்கும்போதோ அந்த இடத்திலிருந்து உருவாகும் கிருமிகள், காற்றில் கலந்து, பரவி, அவர்களை தாக்குவதிலிருந்து தப்பிக்கத்தான் அவர்கள் புகைப்பிடிக்கிறார்கள். மருத்துவ ரீதியாக இவை நிரூபிக்கப்படவில்லையென்றாலும், அவர்கள் புகை பிடிப்பதால் இதுவரை தொற்றுக்களுக்காக பாதிக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும், உடனே புகை பிடிப்பது நல்லது தானா? என்ற ஐயம் மன தில் உருவாகலாம். "நம்முடைய வாயிலிருந்து வெளியேறும் புகையிலையின் புகை, காற்றில் உள்ள நச்சுப்பொருட்களோடு வினைபுரிந்து அதனைச் செயலற்றதாக்கு கிறது. இது இடுகாட்டிற்கு அருகில் உள்ள வர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது, மற்றவர்களுக்கல்ல. மற்றவர்களுக்கு இவை எதிர்வினை புரிந்து புற்றுநோயைத் தரவல்லது" என்ற எனது கருத்தை மறுக்க விரும்புவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

அதேபோல் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்குப் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காததால் உடல் குளிர்மையடைகிறது. உடல் ஒரு எல்லைக்கு மேல் குளிர்மை யடைந்தால் உடலியக்கம் பாதிக்கப்படும். அதனால் குளிர்மையை விரட்டியடிக்கவும், உடலியக்கத்தில் சீரான தன்மை இருக்கவும், மதுவை அருந்துவார்கள். கஞ்சாவைப் புகைப்பார்கள். இது மலைப் பிரதேசங்களில் தொடர்ந்து வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்கள் அருந்தினால் உடல் அதிக வெப்பமடைந்து, குடல், சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வல்லது. இது போன்ற நுட்பமான விடயங்கள் இருப்பதாலும் சித்த மருத்துவம் பொதுமைப்படுத்தப்படாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன்.

ஒரு மருத்துவருக்குத் தெரியும் சித்த மருத்துவத்தின் தொழில்நுட்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அதனைப் பொதுமைப்படுத்த முன்வருவதில்லை. அத்துடன் தனக்கான பொருளீட்டும் வழியாகவும் சித்த மருத்துவத்தை ஒரு சிலர் கையாளுவதால் அதனைப் பொதுமைப்படுத்த இயலவில்லை என எண்ணுகிறேன்.

போரின்போது பயன்படுத்தப்பட்ட வேதியல் பொருட்களால் இலங்கை முழுவதும் அடுத்த பத்து ஆண்டுகளில் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் என்றொரு கருத்து வேகமாகப் பரவி வருகிறதே. இது குறித்து மருத்துவ ரீதியான விளக்கம் தர இயலுமா?

இது ஒரு மூட நம்பிக்கையே. சித்த மருத் துவத்தைப் பொறுத்தவரை, ஆண், மூக்கின் இடது பக்கத் துவாரத்தின் வழியாகப் பிரணாயாமம் செய்துவிட்டு, தாம்பத்தியம் கொண்டால் பெண் குழந்தையும், வலதுபக்க துவாரத்தின் வழியாகப் பிரணாயாமம் செய்துவிட்டு, உறவுகொண்டால், ஆண் குழ ந்தையும் பிறக்கும் என்று உறுதி கூறுகிறது.

சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்று எந்த நோயை விசே டமாகக் குறிப்பிடுவீர்கள்?

எல்லாவித நோய்களையும் குணப் படுத்த இயலும் என்றாலும் புற்றுநோயை விசேடமாகக் குறிப்பிடலாம். புற்றுநோய் முதலில் எப்படி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் புகைபிடிக்கிறோம் அல்லது புகையிலைப் பொருட்களை வாயில் வைத்துக் கொள்கிறோம். இதிலிருக்கும் துவர்ப்பு சக்தியானது, உடலுக்குள் சென்று, இரத்த ஓட்டத்தின் வேகத்தைத் தடுக்கிறது. எங்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதோ அங்குள்ள இரத்தம் மட்டுமே தூய்மைப்படுத்தப்படும். இது இயற்கை விதி. துவர்ப்புச் சக்தியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் இங்கு புற்றுநோய்க்கான கிருமிகள் உருவாகிறது. இந்த மூல காரணத்தைத் தெரிந்து - உணர்ந்து நோயாளியின் உதவியுடன் புற்றுநோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி - உரு வாக்கி, நோயை குணப்படுத்துகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தியில்லாதபோது தான் நம்மை எல்லா நோய்களும் தாக்குகின்றன. உணவே மருந்து மற்றும் உடற்பயிற்சி என்ற இரண்டை மட்டும் உறுதியாக, இறுதிவரை கடைப்பிடித்தால், ஆரோக்கிய வாழ்வு சாத்தியமாகும். அதனைவிட மனதை எந்த விடயங்களும் பாதிக்காமல் வைத்துக் கொண்டாலே நோய் நம்மை அணுகாது.