சோரியாசிஸ் தோல்நோய்க்கு புதியவகை பயோலொஜிக்கல் ஊசிமருந்து!

  • Dr.Kumaresan
  • Apr 16, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
சோரியாசிஸ் தோல்நோய்க்கு புதியவகை பயோலொஜிக்கல் ஊசிமருந்து!

சோரியாசிஸ் என்பது உடலில் மேல்தோலில் உள்ள அணுக்கள் பண்மடங்கு பெருகி, தோல் சிவந்து, தடித்து, மீன் செதில் போல் உதிர கூடிய ஒரு வகையான தோல் வியாதி.

இந்நோயினால் உலகம் முழுவதும் ஏறத்தாழ பல கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக சோரியாசிஸ் தலை, முழங்கை, முழங்கால்களில், பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோய் ஒரு சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் போன்ற இடங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சோரியாசிஸ் தலை முதல் பாதம் வரை தோலில் மட்டும் இல்லாமல் நகம் மற்றும் எலும்பு மூட்டுகளையும் பாதிக்கும். இந்நோயினால் தோலில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு மற்றும் வலி போன்றவை நீண்ட நாட்களாக ஏற்படுத்தும் தொந்தரவுகளால் உடல் பாதிப்பு மட்டும் இன்றி மன உளைச்சலுக்கும் சேர்த்து ஆளாக்கப்படுகின்றனர்.

சோரியாசிஸ் நோயினால் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனினும் சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான சிகிச்சை முறைகளினால் இந்நோய் பெருகி “பஸ்ட்டுலர் சோரியாஸிஸ்” எனப்படும் மஞ்சள் நிற கொப்புளங்களை உருவாக்கி உடல் முழுவதும் பரவி உயிருக்கு ஆபத்தான விளைவினை உருவாக்கும்.

தற்பொழுது இவ்வியாதி ஏற்பட முக்கிய காரணம் IL - 17 எனப்படும் வினைப்பொருள் அதிகம் சுரப்பதினால் உருவாகிறது எனக் கண்டறிந்துள்ளனர். இதனை குணப்படுத்த உயிருள்ள அணுக்களில் இருந்து IL - 17 ஐ தடுக்கும் பயோலொஜிக்கல் மருந்தை கண்டறிந்துள்ளனர்.

இந்த பயோலொஜிக்கல் மருந்து ஊசி வடிவில் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது இந்தியாவில், மதுரையில் நம் குளோ தோல் மருத்துவமனையில் கிடைப்பதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இந்த ஊசி வாரம் ஒரு முறை தொடர்ச்சியாகவும், பின்பு மாதம் ஒரு முறை இன்சுலின் ஊசி போல் போட்டு கொள்ளவேண்டும். முதல் 5 வாரத்திலேயே இவ்வியாதியின் தாக்கம் 80% குறைந்துவிடும், அடுத்த இரு மாதங்களில் முழுமையாக சரியாகிவிடும். இச்சிகிச்சை முறையினை மேற்கொள்வதனால் சோரியாஸிஸ் வியாதிக்கென்று மாத்திரை சாப்பிடுவது, மருந்து தடவுவது போன்ற சிரமங்களில் இருந்து விடுபடலாம். 

இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் வருடம் முழுதும் சோரியாஸிஸ் வியாதிக்காக நம் மேற்கொள்ளும் மற்ற சிகிச்சைக்காகவும், மருந்துகளுக்காகவும் செய்யும் செலவையும் வியாதியினால் ஏற்படும் மன உளைச்சலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு முழுமையான தீர்வு இந்த பயோலொஜிக்கல் ஊசி மருந்து.

இந்த ஊசி மருந்து சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.