சாவித் துவார சத்திர சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டியை அகற்றி சாதனை

  • Dr.M.Maran
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
சாவித் துவார சத்திர சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டியை அகற்றி சாதனை

 ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்தி ரேலிய கண்டங்களிலே முதன்முறையாக ஒரு நோயாளியின் இரைப்பையில் இருந்த புற்றுநோய்க் கட்டியை சாவித்துவார சத்திர சிகிச்சை  மூலம்  அகற்றி சாதனை புரிந்திருக்கிறார் சென்னையில் இயங்கிவரும் பாரதி ராஜா மருத்துவமனையின் இயக்குநரும், சத் திர சிகிச்சை  நிபுணருமான டொக்டர் எம்.மாறன். அவரைச் சந்தித்து, இந்த சாதனை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

இனி மருத்துவர் பேசுகிறார்....

அறிவியல் முன்னேற்றமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் எல்லாத் துறைகளிலும் தினந்தோறும் வளர்ந்து வருகிறது. நேற்றிருந்த நிலை வேறு, இன்றிருக்கும் நிலை வேறு என்கிற அளவில் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன.

பொதுவாக ஒரு கண்டுபிடிப்பு, எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதோ, அங்கு தான் முதலில் பிரபலமாகும். அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் பரவத் தொடங் கும். அதுவும் இந்தியா, இலங்கை, பாகிஸ் தான் போன்ற வளர்ச்சியடைந்து வரும் தெற் காசிய நாடுகளைப் பொறுத்தவரை, மேற் குலகில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டு பிடிப்புகளை அறிமுகப்படுத்த சில காலமா வது பிடிக்கும். ஆனால் மருத்துவச் சுற்றுலா வில் முன்னணி வகிக்கும் இந்தியாவில் அதி லும் சென்னையில், புதிதாகக் கண்டுபிடிக் கப்படும் மருத்துவ உலக தொழில்நுட்பம் அடுத்த சில மாதங்களிலேயே அறிமுகமாகி விடுகிறது. இதற்குக் காரணம் மருத்துவர்கள் தங்களை எப்போதும் மேம்படுத்திக்கொள் வதில் காட்டும் அக்கறையும், நோயாளிக்கு அதிகபட்சமான குணப்படுத்தலை வழங்க வேண்டும் என்ற மட்டற்ற ஆர்வமும் தான்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் கீ ஹோல் சர்ஜரியில் புதிய வகை மருத்துவ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் சொல்லவேண்டுமென்றால் சாவித் துவார நுண்ணறுவை சிகிச்சை எனலாம்.

இதனைக் கேட்டவுடன் ஓரளவு மருத் துவ அறிவு கொண்டவர்கள் சிலர் சாவித் துவார சத்திரசிகிச்சையா? எனக்குத் தெரி யும் என்பதுபோலப் பேசுவார்கள். ஆனால் நான் குறிப்பிடுவது அதில் அறி முகப்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பம்.

முன்பெல்லாம் சாவித்துவார சத்திர சிகிச்சை  என்றால் மூன்று முதல் ஒன்பது துவாரங்கள் வரை போடப்பட்டு சிகிச்சை  நடைபெறும். ஆனால் சமீபத் தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் ஒரேயொரு துவாரம்தான் போடப்படும். தொப்புளில் 1.5 செ .மீ. அள வில் போடப்பட்டு சிகிச்சை  மேற்கொள்ளப் படும். இப்படிப் போடப்பட்ட துவாரத்தின் வழியாக, கெமரா மற்றும் வெட்டுவதற்காக ஒன்று, பிடிமானத்திற்காக ஒன்று என மூன்று விதமான கருவிகள் உள்ளே செ லுத்தப்படு கின்றன.

இம்முறையின் மூலம் சில சத்திரசிகிச்சை  நிபுணர்கள் சிறிய அளவிலான சத்திர சிகிச் சை யினைச் செ ய்து வெற்றி ஈட்டியிருக்க லாம். ஆனால் நான் செ ய்திருக்கும் சாதனை முற்றிலும் மாறுபட்டது. அதாவது நைஜீரிய நாட்டிலிருந்து வந்து எங்கள் மருத்துவமனை யில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த  46 வயதான பெண்மணி சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். அவரை முதலில் முழுமையாகப் பரிசோதனை செய்தோம். பரிசோதித்ததில் அந்தப் பெண்மணியின் வயிற்றின் இரைப்பைப் பகுதியில் புற்று நோய்க் கட்டியும், இரத்த இழப்பு அதிகமாக இருந்ததால் இரத்தச்சோகை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் இரைப்பை யின் அளவில், மூன்றில் இரண்டு பங்கை அந்தக் கட்டி ஆக்கிரமித்திருந்தது. இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டிருந்ததால் கர்ப் பப்பையினையும் அகற்ற வேண்டிய நிலை யும் இருந்தது. இந்நிலையில் அந்தப் பெண் மணிக்கு நவீன சாவித்துவார சத்திர சிகிச்சை யினை மேற்கொண்டோம். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிகிச்சை யின் மூலம் அந்தப் பெண்மணியின் இரைப்பை யில் இருந்த புற்றுநோய்க்கட்டி அகற்றப் பட்டது. அத்துடன் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. நோயாளி பத்து மணி நேரத்திற்குப் பின் சகஜ நிலைக்குத் திரும்பி, மற்றவர் களைப் போல் சாப்பிடத் தொடங்கினார்.

இதைப் பழைய முறையிலான சிகிச்சை  முறை மூலம் மேற்கொண்டால் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகியிருக்கும். மருத்துவ மனையில் தங்க வேண்டிய கால கட்டமும் அதிகமாக இருந்திருக்கும். எம்மைப் பொறுத்தவரை இந்த அதி நவீன சத்திர சிகிச்சை  பாதுகாப்பானது. அதிக செ லவில் லாதது. சத்திர சிகிச்சை க்கான கால அளவு மிகக் குறைவு. மருத்துவமனையில் தங்கும் கால வீணடிப்பு இல்லை. இரத்த இழப்பு இல்லை. இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பிவிடலாம். இவ்வாறான பல சாதக மான அம்சங்கள் இருப்பதால் இந்த  சிகிச் சை யினைப் பரிந்துரைக்கிறோம். வெற்றிகர மாகவும், குறைவான செ லவிலும் செ ய்து வருகிறோம்.

இடைமறித்த நாம், உடற்பருமனைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் என்ற சத்திரசிகிச்சை  செய்துகொண் டவர்களில் சிலர், அந்தச் சிகிச்சை யால் பல னில்லை எனக் கூறுவது பற்றிக் கேட்டோம்.

இல்லை. இதை என்னால் ஏற்க இயலாது. ஏனெனில் இத்தகைய சத்திர சிகிச்சை யில், மருத்துவர்கள், உடற்பருமனால் பாதிக்கப் பட்டவர்களின் இரைப்பையின் அளவை. அதாவது உணவைச்  சே மித்து வைத்துக் கொள்ளும் இரைப்பையின் கொள்ளளவை பைபாஸ் சர்ஜரி மூலம் வெகுவாகக் குறைத் துவிடுகிறோம். இதன் மூலம் உடற்பரும னால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல் எடை படிப்படியாகக் குறைக்கப்படும். இவ் வகையான சத்திரசிகிச் சை க்குப் பின் மருத் துவர்கள் கூறும் உண வுக் கட்டுப்பாட்டை மீறும் நோயாளிகளுக் குத்தான் பலன் கிடைப்பதில்லை. அதற்குப் பதில் விரும்பத்தகாத பின் விளைவுகளையும் வரவழைத்துக்கொள் கிறார்கள். என்னு டைய அனுபவத்தில் ஒரு நோயாளி 255 கிலோ எடையுடன் உடற்பருமனால் பாதிக்கப்பட்டு, என் னிடம் சிகிச்சை க்காக வந்தார். அவரை பேரி யாட்ரிக் சிகிச்சை  மூலம் குணப்படுத்தி னேன். தற்போது அவரின் உடல் எடை 89 கிலோவாக இருக்கிறது.

உடற்பருமனைப் பொறுத்தவரை போதிய உடற்பயிற்சியின்மை, கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருளை அதிகமாக உண்ணுதல், சத்துள்ள ஆகாரங்களைச் சாப் பிடாமல் இருத்தல், நேரம் தவறிச் சாப்பி டுதல், பொருத்தமில்லாமல் சாப்பிடுதல் எனப் பல காரணிகள் உள்ளன. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு நடந்தால் உடற்பருமனிலிருந்து விடுதலை பெறுவதுடன், நீ ரிழிவு, இரத்த அழுத்தம், வயிறு, சிறுநீ ரகம், இதயம் தொடர்பான சிக்கல்களிலிருந்தும் எளிதில் விடுபடலாம்.