மாரடைப்பை உணர்ந்து, தற்காத்துக் கொள்ளலாம்

  • Dr.Ayaz Akber
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
மாரடைப்பை உணர்ந்து, தற்காத்துக் கொள்ளலாம்

"நம்முடைய உடலில் தோன்றும் வலி, அழுத்தம், இறுக்கம் ஆகியவை, உடல் நலமின்மையை நமக்கு உணர்த்திவிடும். இந்த அறிகுறிகளால் அனைவருக்கும் ஒரே அளவிலான நோயின் தன்மை இருக்கிறது என்று பொருளல்ல..." என்று மாரடைப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றினார் இதய நோய் மருத்துவ நிபுணரும், சென்னையில் இயங்கி வரும் ஓக்ஸிமெட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டொக்டர் அயாஸ் அக்பர். அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்து www.medicalonline.in இன் சந்தேகங்களை,  வினாவாக்கி கேட்டபோது, அவர் அளித்த விளக்கமும், பதிலும் இதோ...

நமக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை எப்படி உணர்ந்துகொள்வது? அதற்கு முன் மாரடைப்பு என்றால் என்ன?


இருதயத் தசைகள் இறந்து சிதைவுறுதலைத்ததான் மாரடைப்பு (மயோகார்டியல் இன்பாக்சன்) என்கிறோம். இருதயத் தசைகளுக்கு தேவையான ஓக்சிஜன் கிடைக்காவிடில், நெஞ்சு ப்பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிகமான வியர்வை வெளியேறுவது, நெஞ்சு இறுக்கமடைவது, மூச்சு திணறல் ஏற்படுவது, இடது தோள்பட்டை, கைகள், தாடை மற்றும் பற்கள் ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுவது போன்ற அறிகுறிகள் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம்.  ஆண்களுக்கு நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றுவதும், பெண்களுக்கு நெஞ்சு எரிச்சலும், மூச்சு திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை வருவதும் பெரும்பான்மையான அறிகுறிகளாகும்.

 ஒரு சிலருக்கு கடினமான நெஞ்சு வலியிருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக தோன்றாது. ஒரு சிலருக்கு லேசான வலி தான் ஏற்படும். ஆனால் அவருக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். அதனால் ஒருவரின் வலியை பொருத்து நோயின் தீவிரத்தை கணிகக இயலாது. எனவே வலி ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகி, வலி எங்கு ஏற்பட்டது? அது எங்கெங்கு பரவியது? அல்லது குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் தான் வலி ஏற்பட்டதா? ஓய்வாக இருக்கும் போது வலி குறைவாக இருக்கிறதா? எந்த பொழுதில் (இரவு, பகல்) அதிகமாக இருக்கிறது? என்பன போன்ற விபரங்களையும் தவறாது கூறினால் சிகிச்சை வழங்குவதற்கு எளிதாகும்.

ஆஞ்சைனா பெக்டோரிஸ் என்பதும், வாசோ ஸ்பாஸ்டிக் ஆஞ்சினோ என்பதும் ஒன்றை மட்டும் தான்  குறிப்பிடுகிறதா? அல்லது வேறு வேறா?

ஆஞ்சைனா பெக்டோரிஸ் என்றால் தமிழில் இதயதமணி நோய் என்று குறிப்பிடுவர். இருதய தசைகளுக்கு தேவையான ஓக்சிஜன் கிடைக்காததால் இது ஏற்படுகிறது. அதிக வேலை, மன அழுத்தம், மன அதிர்ச்சியின்போது பெரும்பாலனவர்களுக்கு லேசான நெஞ்சு வலி, மூச்சு திணறல், செஞ்சு இறுக்கம் ஆகியவை தோன்றி,  சில தருணங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் வாசோ ஸ்பாஸ்டிக் ஆஞ்சினோ என்பது, இருதய தசைக்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் தோன்றுவது. இதனால் ஒரு சிலருக்கு இரவு நேரங்களில் இருதயம் படபடப்புடன் இயங்கி,  தூக்கமின்மையை  ஏற்படுத்துகிறது.  உடனே உரிய மருத்துவரை அணுகினால், அவர் நம்முடைய நகங்கள், நாக்கு ஆகியவற்றை பரிசோதித்து ஓக்சிஜன் குறைவால் நீலம் பாய்ந்திருக்கிறதா என்றும், கை, கணுக்கால்களில் வீக்கம் உள்ளதா என்றும் பரிசோதிப்பார். மேலும் ஸ்டெதாஸ்கோப்பின் மூலம் இதய துடிப்பின் வேகம், எண்ணிக்கை வீகிதம், இடைவெளி ஆகியவற்றையும் ஆராய்ந்து,  பாதிப்பின் அளவையும்  கணிப்பார்.

வேறு சிலருக்கு எக்கோ, ஆஞ்சியோ கார்ட்டோடிகராம், ஸ்பிக்மோகார் உள்ளிட்ட சில பரிசோதனைகளையும் செய்து நோயின் தீவிரத்தையும், நிலையையும்  இனம் கண்டறிந்து சிகிச்சையளிக்க நேரிடும்.

ஆர்டிரியோ ஸ்கினிரோசிஸ் என்றால் என்ன?

இதற்கு நேரடியாக விடை தருவதை விட, சில அடிப்படையான உடலியக்க செயல்பாடுகளை கூறினால் தான் புரிந்துகொள்ள முடியம். நம்முடைய உடலில் இருக்கும் இரத்த நாளங்களின் தலையாய பணி என்ன தெரியுமா! உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் தேவையான ஓக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களை தருவதுதான் இரத்த நாளங்களான தமனி மற்றும் சிரையின் பணி. இந்த பணி சிறப்பாக நடைபெறவேண்டுமானால் இவை தடையின்றி செல்ல சீரான பாதை அவசியம். இதே தருணத்தில் மற்றொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். உடலின் எடையில் ரத்தத்தின் எடை ஏழு சதவீதமாகும். இது மாறாமல் இருந்தாலும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் மாறுபடும்.

நாம் சாப்பிடும்போது அதிக அளவு இரத்தம் வயிற்றின் ஜீரணத்திற்காக உதவுகிறது. அதேபோல் நாம் கடினமாக உடற்பயிற்சி செய்யும் போது அழற்சியடையும் தசைகளுக்கு தேவையான அதிக ரத்தம் மற்றும ஓக்சிஜன் அவ்விடத்திற்கு செல்லும். நம் உடல் குளிர்ந்தாலும், அதிகமாக சூடைந்ததாலும் ரத்தம் தான் நம் உடலை சமன் படுத்துகிறது. ஆரோக்கியமான இரத்த நாளங்களால் தான் இரத்தத்தின் கனஅளவு மற்றும் அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. உடல் முதுமையடையும் தருணத்தில் சில காரணங்களால் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதாவது இரத்த குழாய்களில் கால்சியம் மற்றும் கொழுப்பு படிவதாலும், மன அழுத்தம், புகைப் பிடித்தல், உடல் பருமன், சர்க்கரை வியாதியாலும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதற்கு தான் ஆர்டிரியோ ஸ்கினிரோசிஸ் நோய் என்று பெயர்.

இந்த நோய் அதிகரிக்கும் போது இரத்த நாளங்களில் தடை மற்றும் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் தேவையான ஓக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமற்போகிறது. ஐம்பது வயதை கடந்தவர்களுக்கு தான் இந்நோய் பெரும்பாலும் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள். இதற்காகத்தான் மருத்துவர்கள் சீரான இடைவெளியில் இரத்த பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கால் மரத்துபோவது, மூட்டுகளில் வீக்கம், சளி தொல்லை, கை, கால்களில் வலி போன்ற அறிகுறிகள் இதய நோய் ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும். இன்னும் சிலருக்கு நடக்கும்போது கால் வலிக்கும், ஆனால் ஓய்வெடுத்தால் அந்த வலி சீரடையும். மேலும் சிலருக்கு ஓய்வாக இருக்கும் போது கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் வலி இருக்கும். இதுவும் இதய நோயின் அறிகுறிதான். இந்த நிலை தொடர்ந்தால் அதாவது திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் பாதம் மற்றும் பெருவிரலில் ஆறாத புண் ஏற்படவும் சாத்தியமுண்டு. இன்னும் சிலருக்கு கேங்கிரின் என்ற புரையோடிய புண்ணும் உண்டாகும்.

இதற்கு,  அடைப்பு ஏற்பட்டிருக்கும் இரத்த நாளங்களை தவிர்த்து, மாற்று வழியை உருவாக்கி இரத்தம் ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் நவீன சிகிச்சையினை எங்கள் மருத்துவமனையில் உலகத்தரத்துடன் வழங்கி வருகிறோம்.

தொடர்புக்கு:  +91 44  42131010