பல் மருத்துவத்தில் காட்காம் தொழில்நுட்பம்

  • Dr.Vijayakumar
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
பல் மருத்துவத்தில் காட்காம் தொழில்நுட்பம்

ஒருவரின் முகத்தை நினைவில் இருத்திக்கொள்ள உதவு வது அவர் சிந்தும் புன்னகை. ஒவ்வொரு புன்னகையும் மனதில் இருந்து உதித்தாலும், அது நிறைவு பெறுவது அவருடைய ஆரோக்கிய மான பற்களின் மூலமாகத்தான்.


ஒருவரின் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\' என்றால், அவரின் `ஆரோக்கியத் தின் அழகு, அவருடைய பற்களில் தெரியும்\' என்பர் நம் முன்னோர்கள். பற்கள், உடலு றுப்பு மட்டுமல்ல, நாம் தொடர்ந்து இயங்க உதவும் தன்னம்பிக்கையின் மூலப்பொருள். எனவே பல்லைப் பாதுகாப்பதில் நாம் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டியதாகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற பல்லைப் பற்றி, நம்மிடையே தோன்றக்கூடிய சந்தே கங்களுக்கு விடையளிக்கிறார் சென்னையில் இயங்கிவரும் `இன்டர்நேஷனல் டென்டல்\' மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், பல் மருத்துவ நிபுணருமான டொக்டர் வி.விஜயகுமார்.

பாக்கு, பான் பராக், புகையிலைப் பொருட்கள், சிகரெட் ஆகியவற்றை உப யோகப்படுத்துவதால் பல் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது?

இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் வாய் மற்றும் வாய்ப்பகுதிக்குள் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என் பதை முதலில் தெரிவித்துகொள்கிறேன். இத் தகைய கேளிக்கைப் பொருட்களைப் பயன் படுத்துவதால் முதலில் பற்களில் கறை படுகி றது. கறை படுவதால் இயல்பாக ஊற வேண் டிய எச்சில் ஊறாமல் போகிறது. இதனால் வாய்ப்பகுதி உலர்ந்துவிடுகிறது. வாய்ப் பகுதி உலர்ந்துவிடுவதால் பாக்டீரியாக்க ளின் செ யற்பாடு அதிகரித்து, வாய் துர்நாற் றம் உருவாகிறது. தொடரும் துர்நாற்றத்தால் பல் சொத்தையாகிறது. பல் சொத்தையா னால் பல் வலி, ஈறு வீங்குதல், முகம் கோர மாகக் காட்சியளித்தல் ஆகியவை ஏற்பட்டு மனிதனை மனரீதியாக முடக்கி விடுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் பன்னிர ண்டு வயதுவரை இருப்பது பாற்பற்கள் என்றும், சொக்லேட், இனிப்பு ஆகிய வற்றை விரும்பிச் சாப்பிடுவதால் எந்த விதமான பாதிப்பும் இல்லையென்றும் ஒரு பிரிவினர் கூறி வர, மற்றொரு பிரிவி னரோ குழந்தைகளுக்கு இனிப்பு வழங் கவே கூடாது என்றும், அதையும் மீறி வழங்கினால்  அவர்களின் பற்கள் பாதிக் கப்படுவதோடு, சொற்களை உச்சரிக்கும் திறனும் பாதிக்கப்படும் என்கிறார்களே. இது உண்மையா?


காரணம் தெரியாமல் பிடிவாதம் பிடிக் கும் குழந்தையைச் சமாளிக்கவும், ஒன்றின் மீதிருக்கும் கவனத்தைத் திசை திருப்பவும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு சொக்லேட் மற்றும் இனிப்பை வழங்குவது தவறாகாது. ஆனால் வழங்கியவுடன் தங்களது பணி முடிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு சொக்லேட்டின் இறு திப் பகுதியிலும் ஏதேனும் ஒருவித அமிலத் தன்மை அடங்கியிருக்கும். இது பல்லின் பாதுகாவலனாக இருக்கும் எனாமலை நேரடி யாகப் பாதிக்கிறது. எனவே சொக்லேட் மற் றும் இனிப்பைக் குழந்தைகளுக்குக் கொடுப் பது தவறல்ல. ஆனால் சாப்பிட்டு முடித்த வுடன் வாயைச் சுத்தப்படுத்திக்கொள்ளத் தூண்டுவது அவசியம். அத்துடன் இரவு நேரங்களில் சொக்லேட்டுகளையோ அல்லது இனிப்புகளையோ தருவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். ஏனெ னில் இரவு நேரங்களில் எச்சில் ஊறுவதும், தண்ணீர் அருந்து வதும் குறைவு.

அதிக குளிர்ச்சியான பொருளை அருந்தினா லும்,  அதிக வெப்ப மான பொருளைச் சாப்பிடுவதா லும் பற்கள் பாதிக்கப்ப டும் என்கிறார்களே, உண் மையா?


ஆரோக்கியமான பற்களாக இருந் தால் பெரிய பாதிப்பு எதுவும் கிடையாது. ஆனால் பல் தொடர் பான ஏதேனும் சிக்கல் இருப்பவர்க ளுக்கு இதனால் பற்களில் கூச்சம் அதிகரிக்கும். இதற்கும் தற்போது சிசிக்சை  வந்துவிட்டது.

மருத்துவர் பரிந்துரைத்தாலும் கடைவாய்ப் பற்களை எந்தக் காரணம் கொண்டும் பிடுங்க அனுமதிக்கக் கூடாது என்கிறார் களே... இது சரியா? மருத்துவ ரீதியாக விளக்குங்களேன்?

கடைவாய்ப் பற் கள் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட எந்தப் பல் லையும் அகற்றவேண்டிய நிலை உருவானால், அதனை அகற்றிடலாம். கடைவாய்ப்பற்களுக்கும், கண் மற்றும் மூளைக்கும் தொடர்பிருக்கிறது என்பதால் அதனை அகற்றக்கூடாது என்கிற கருத்தைத் தற்போதைய நவீன பல் மருத்து வம் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில்,  பல் மருத்துவத்தில் பல நவீன சிகிச்சை கள் அறி முகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரூட் கேனால் ட்ரீட்மெண்ட், எலும்புப் பகுதியில் ஊடுருவி யிருந்தாலும்கூட அதற்கும் சிறிய அளவி லான சத்திரசிகிச்சை  எனப் பல் மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளதால் தற்போதைய பல் மருத்துவர்கள் பற்களை அகற்ற வேண்டும் என்று எளிதில் பரிந்துரைப்பதில்லை.

பல் மருத்துவத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நவீன சிசிச்சை என்ன?

காட்காம் (cadcam)  தொழில்நுட்பம். இந் தத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் - தெற் காசியாவிலேயே முதன்முதலாக எங்கள் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியிருக் கிறோம். பாதிக்கப்பட்ட பல்லை சுத்தப்படுத் திய பின் மீண்டும் பாதிக்கப்படாமல் இருக்க, பல்லின் மீது மேலுறையைப்போல் ஒரு உறையைப் போடுவோம். இந்த உறையின் தயாரிப்பில் இதுவரை கையாளப்பட்ட உத்தி யால் மூன்று சதவீதத்தினருக்கும் குறைவான வர்களுக்கு முழுமையான சிகிச்சை  வழங்க இயலவில்லை. உறையைத் தயாரிப்பதில் கால அவகாசமும் கூடுதலாக இருந்தது. இத னால் சிலருக்கு வாந்தி, குமட்டல் போன்ற  அசெ ளகரியங்கள் ஏற்பட்டன. அத்துடன், அதில் ஏதேனும் சிறியளவிலான பொருத்தப் பாடின்மை பிரச்சனையும் இருந்துவந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காட் காம் தொழில் நுட்பத்தில், பாதிக்கப்பட்ட பல்லின் மீதான உறை (cap) மிகத்துல்லிய மாகத் தயாரிக்கப்பட்டு, பொருத்தப்படுகி றது. இதன்மூலம் பல பின்விளைவுகள் தவிர் க்கப்பட்டிருக்கின்றன. காலமும் மிச்சப்படுத் தப்பட்டிருக்கின்றது. ஈறுகளைச் சுத்தப்படுத்த உதவும் ஸொப்ட் டிஷ்யூ லேசருடன், பல், எனாமல் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த புதி தாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹார்ட் டிஷ்யூ லேசர் என்ற சிகிச்சை யையும் நாங்கள் எங்கள் மருத்துவமனையில் வழங்கி வருகி றோம். பல் சிகிச்சை யில் மைக்ரோஸ்கோப்பி னையும் பயன்படுத்தி சிகிச்சை யளித்து வரு வதனால் பல்லுக்கான சிகிச்சை  துல்லியமாக் கப்பட்டிருப்பதை உறுதிசெ ய்கிறோம். (இந்த மைக்ரோஸ்கோப், ஒரு பல்லின் இயல்பான உருவத்தை 25 மடங்கு பெரிதாக்கிக் காட் டும் திறனுடையது)

காய்ச்சலுக்கு மாற்று மருத்துவத்தின் மூலம் நிவாரணம் கண்ட ஒருவருக்கு, பின் விளைவாக எல்லாப் பல்லும் கொட்டி விட்டது. அவருக்குத் தற்போது வயது 37 ஆகிறது. அவர் தனக்குப் பழையபடி சீரான பல் வரிசை  கிடைக்குமா? என்று கேட்டால் தங்களின் பதில் என்ன?

பழையபடி சீரான பல் வரிசை யை அவ ரால் பெற இயலும். தேவைப்படும்போது மட்டும் வாயில் தற்காலிகமாகப் பொருத்திக் கொள்ளக்கூடிய பல் வரிசை   மற்றும் நிரந்தர மான பல் வரிசை  என இரண்டு வித சிகிச் சை கள் இருக்கின்றன. நீ ங்கள் குறிப்பிடுபவ ரின் ஒத்துழைப்பைப் பொறுத் தும், அவருடைய உடல் நிலை குறித்தும் இவை தீர் மானிக்கப்படலாம். இம் ப்ளாண்ட்  (implant) சத்திரசிகிச்சை  மற்றும் கைடட் (guided) சத்திர சிகிச்சை  மூலம் தீர்வு தர இயலும்.

இளைய தலை முறையினர் திரு மண வைபவம், பிறந்த நாள் விழா மற்றும் ஏதேனும் விசே டங்களுக்குச் செ ல்லும்போது தற் காலிகமாகத் தங்கள் பற்களை வெண்மை யாக வைத்திருக்க உத வும் ஜெல்களையும், ஸ்டிக்குகளையும் பயன் படுத்துகிறார்களே. இதனால் பற்களில் எவ்வகை யான பாதிப்பு ஏற்படும்?

ஓரிரு முறை என்றால் பர வாயில்லை. ஆனால் இது தொடர்ந்தால் பற்களின் மேலுள்ள எனாமலை இத்தகைய ஜெல்கள் அழித்துவிடும். இதனால் குளிர்ச்சியான பொருளை அருந்தினாலோ அல்லது வெப்ப மான பொருளைச் சாப்பிட்டாலோ பல்லில் கூச்சம் போன்ற உணர்வு மாற்றம் ஏற்படும். ஒவ்வாமை ஏற்படும். பற்களின் ஆயுள் குறையும். பற்களின் வலிமை குறையும். பத் தாண்டுகள் கழித்து அனைத்துப் பற்களையும் பாதுகாக்க, வேறு வழியில்லாமல்  அவற்றின் மீது உறை போட்டுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.

நீ ரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல் தொடர்பான சிக்கல் இருந்தால் சிகிச் சை யளிப்பது கடினமாமே. உண்மையா?

ஓரளவு உண்மைதான். நோயாளியின் வயது, நீ ரிழிவு நோயின் அளவீடு ஆகிய வற்றைக் கருத்திற்கொண்டே சிகிச்சை  வழங் கப்பட வேண்டும். பல்லை அகற்றியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், நீ ரி ழிவை கட்டுக்குள் கொண்டு வந்த பின்பு தான் சிகிச்சை யளிக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு காலத் தின்போது பல்லில் வலி ஏற்பட்டால், அதற்குரிய சிகிச்சை யை மேற்கொள்ளக் கூடாது என்றும், மீறி மேற்கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்களே?

கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்லில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், எக்ஸ் ரே எடுக்காமல் சிகிச்சை யளிக்க இயலும் என்றால் சிகிச்சை  எடுத்துக்கொள்ளலாம். அத்துடன்  பல் வலி குணமடைய வழங்கப்படும் வலி நிவாரணிகளை ஒரு முறைக்கு இரு முறை ஆலோசித்தும் அல்லது மகப்பேறு மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்தும் எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் பல்லில் உருவான சிக்கல்களுக்கு சிகிச்சை  எடுப்பதற்கும், பேறு காலத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்க ளுக்கு பல்லில் சத்திர சிகிச்சை  செய்யக் கூடாது என்றும், பதினைந்து வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் பல் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார் களே ஏன்?

ஏனெனில் பன்னிரண்டு வயதிற்குள் பல்லில் சொத்தை ஏற்பட்டு, பல்லை அகற்றியி ருந்தாலும்கூட, அவ்விடத்தில் புதிதாக பல் முளைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் பல் மருத்துவ நிபுணர்கள் பன்னிரண்டு வயதிற் குள் இம்ப்ளாண்ட் போன்ற சத்திர சிகிச் சை யை மேற்கொள்ளமாட்டார்கள். ஏனெ னில் புதிதாக உருவாகும் பல் எப்படி, எந்த அளவுகளில் வெளிவரும் என்பதை உறுதி யாகக் கூற இயலாது.

பல் விழுந்து சில ஆண்டுகள் ஆகியும் பலர் அங்கு பல்லைக் கட்டிக்கொள்வது அவசியமற்றது என்று எண்ணுகிறார்கள். இதனால் பின்விளைவுகள் வருமா?

பல்லில் சொத்தை ஏற்பட்டு, வேறுவழி யில்லாமல் பல்லை அகற்றியிருந்தால், அகற் றப்பட்ட ஆறு மாதத்திற்குள் மீண்டும் அங்கு வேறு பல்லை செ யற்கையாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிப்பதால் உடனடியாக எந்தப் பின்விளைவும் தெரி யாது. ஆனால் ஆறு அல்லது ஏழு ஆண்டு கள் கழித்து ஜீரணத்திற்காகப் பயன்படும் பற் கள், தங்களின் பணியைச் செ ய்ய மறுத்து விடுவதால், வயிற்றில் அஜீரணத்தை ஏற்ப டுத்தும்.  பேச்சுத் திறன் பாதிக்கும். பேச்சில் தெளிவு இருக்காது. மனரீதியான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும் பும் விடயம் என்ன?

இரவில் உறங்கும் முன் அவசியம் பல் லைத் துலக்குங்கள். ஒவ்வொரு ஆறு மாதத் திற்கொரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் பல்லில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை மருத்துவர்களாலோ, மருந்துகளாலோ முழு வதுமாக மீட்டெடுக்க இயலாது. ஆனால் பாதிப்புப் பரவாமல் தடுக்க இயலும்.

மேலதிக விபரங்களுக்கு:

கைப்பேசி எண் + 91 99400 40055