மகப்பேற்றை உருவாக்கும் மகத்தான சிகிச்சைகள்

  • Dr.Geetha Hari Priya
  • Dec 06, 2017
Appointment                Doctor Opinion          
 
மகப்பேற்றை உருவாக்கும் மகத்தான சிகிச்சைகள்

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் பிரபலமான டாக்டர் கீதா ஹரிப்பிரியா www.medicalonline.in க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

கல்யாணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லையே! என்று தம்பதியினரே சொல்ல இயலாத வருத்தத்தில் இருக்க, அதே தருணத்தில் உற்றார் உறவினரின் அவதூறும் தொடர... இத்தகைய தம்பதியருக்கு வழிகாட்ட, குழந்தைப்பேறு மருத்துவத்தில் தற்போது பல நவீன முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் உண்டு. ஆண், பெண் இருவருக்கும் இதில் சம பங்கு உண்டு. பெண்களுக்கு சுரப்பியில் (Hormone) கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், இரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு அல்லது நீர் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். இதைத் தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் (Fibrid) அல்லது சதை வளர்ச்சி (Septum) இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தையும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சத்திர சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99% சீராக்கலாம். எல்லாக் குறைபாடுகளுக்கும் சோதனைக்குழாய் சிகிச்சை  அவசியம் என்று சொல்ல முடியாது. 90% குறைபாடுகளை லேப்ரோஸ்கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சத்திர சிகிச்சையினால் சரிசெய்ய முடியும். இந்த சத்திர சிகிச்சை, ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என கூறுகிறார் டொக்டர் கீதா ஹரிப்பிரியா.

முட்டைப்பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீற்றர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸகேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு இரத்தப்போக்கோடு சிறுதுளையிட்டும் அகற்றலாம். தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம்.

டியூப்பில் உள்ள நீர் (Hudrosalpinx) அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறுதுளை சத்திர சிகிச்சையினால் சரி செய்யலாம். சரி செய்த பிறகு 90% பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதைத்தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

ஹிஸ்டராஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம். நீக்கிய பின் 95% பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்களுக்கும் அதை மாற்றி, டியூப்பை லேபரோஸ்கோப் வழியாகச் சரிசெய்யும் வாய்ப்பு உண்டு.

ஆண்களும் 50% குழந்தையின்மைக்குக் காரணமாவார்கள். விரையில் வீக்கம், விரை கீழே இறங்காமை, பல வியாதிகள், டிபி, புட்டாளம்மை ஆகியன விந்து உற்பத்தியைப் பாதிக்கலாம். இதைத்தவிர விந்து உற்பத்தியைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய காரணம் குடியும் சிகரெட் பிடிப்பதும் தான். இவற்றைக் குறைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

1990ஆம் ஆண்டிற்கு முன்பு 5 மில்லியன் உயிரணுக்கள், 50% அசையும் தன்மை இவற்றுக்குக் குறைவாக இருந்தால் குழந்தை பிறக்காது என்ற நிலைமை இருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டில் மருந்துகளாலும், லேபரஸ்கோப் சத்திர சிகிச்சையாலும், குறைபாடுகளை 84-க்கும் வாய்ப்பு உண்டு. விந்து இல்லாத போதிலும், (Azouspermia) விரையிலிருந்து விந்தை எடுத்து, அதை முட்டையில் செலுத்தும் (ICSI) முறையினாலும் குழந்தைப்பேற்றை உருவாக்கலாம்.

பொதுவாக குழந்தையின்மை சிகிச்சை  அதிக செலவில்தான் செய்யமுடியும் என்பது இல்லை. முதற்கட்டமாக விந்தை கர்ப்பப்பையில் செலுத்தும் முறையைத்தான் (Intrauterine Insemnation) செய்து பார்ப்போம்.

இந்தச் சோதனையை வெவ்வேறு கால கட்டங்களில் ஆறு முறை செய்து பார்க்கலாம். இது கணவருடைய விந்தில் தான் செய்யப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான விந்துகளை எடுத்து கர்ப்பப்பையில் செலுத்தினால் கர்ப்பப்பையின் வாயில் சில சமயம் ஏற்படும் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கலாம். இந்த எதிர்ப்பு சக்தி, விந்து கர்ப்பப்பையின் உள்ளே செல்வதற்குத் தடையாக இருக்கும். ஐ.வி.எப். முறையினால் கரு உருவாவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நல்ல முறையில் நவீன கருவிகளை, கொம்ப்யூட்டரைஸ்ட் முறையில் இதைச் செய்தால் 25-50% சதவீதம் கரு உருவாகும் வாய்ப்பு உண்டு. இதை 6 முறை செய்வதால் 80-85% பெண்கள் தாய்மை அடைய வாய்ப்பு உண்டு. செலவும் மிகக் குறைவே.

இந்த முறையினால் தாய்மை அடைய முடியவில்லை என்றால், அடுத்தது சோதனைக் குழாய் (Test Tube Baby IVF, ICSI) என்ற முறையைக் கையாளலாம். இந்த முறையினால் 70% பெண்கள் தாய்மை அடைய வாய்ப்பு உண்டு. இந்த முறை 1978ஆம் ஆண்டிலிருந்து செய்யப்பட்டு வந்தாலும் இன்றைய அதிநவீன கருவிகளினால் குழந்தை பாக்கியம் கிடைக்க அதிகூடிய வாய்ப்பு உண்டு. ச மீபத்தில் `யூமிடிகிரிப்' என்ற புதிய கருவியின் உதவியால் நமது உடலில் டியூபில் என்ன வெப்ப நிலை, Oxygen Carbondioxide நிலைமை உள்ளதோ அதே நிலைமையில் முட்டை, விந்தைச் சேர்க்க, கர்ப்பமாவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். முட்டை விந்து சேர்க்கும் எம்ரியாலஜி லேப்பில் Hepa Filter மற்றும் கோடா டவர் என்ற கருவிகளினால் காற்று மிகவும் சுத்தமாக இருப்பதால் இதற்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். கொம்ப்யூட்டரைஸ்ட் லேச ர் சிகிச்சை , கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகப்படுத்துமா? என்று பல பெண்கள் கேட்பதுண்டு. வயதானவர்களுக்கும், பலமுறை தோல்வியடைந்தவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். மேலும் கருவின் ஓடு கடினமாக இருந்தால் அதை சரி செய்வதற்கும் பயன்படுவதால், இதைப் பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம்.

முட்டை உற்பத்தி குறைந்தவர்களுக்கு வேறொருவரின் கருமுட்டையைக் கொடுப்பதனால் யாருக்கும் குழந்தை இல்லை என்ற நிலையே இந்த காலத்தில் கிடையாது. 25 வயதுக்குக் குறைவான வயதுடைய பெண்களிடமிருந்து முட்டையை எடுத்து, அதை IVF மூலமாகக் செலுத்துவதானல், 70-80% பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை நூற்றுக்கணமான பெண்கள் பிரசாந்த் கருத்தரிப்பு மையத்தில் இச்சிகிச்சையினால் பலன் பெற்றுள்ளார்கள். சில பெண்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம், கர்ப்பப்பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பை இல்லாமை, பல முறை கருச்சிதைவு ஏற்படுதல், இதயக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு அல்லது இரத்தம் உறையும் சக்தியில் கோளாறு என்பனவாக இருக்கலாம். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. மக்களின் மனப்பான்மை மாறியுள்ளது. இப்போது எல்லோரும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

நமக்கு மனதில் தெம்பும், தைரியமும், `நான் எப்படியும் சாதிப்பேன்' என்ற மனப்பான்மையும் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் உறுதியாக உள்ளது என்றார் டொக்டர் கீதா ஹரிப்பிரியா.

தொடர்புக்கு: + 91 44 2836 3113