கருச்சிதைவின் பல்வேறு நிலைகளும், அதன் காரணங்களும்...

  • Dr.Kamala Selvaraj
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
கருச்சிதைவின் பல்வேறு நிலைகளும், அதன் காரணங்களும்...

சோதனைக்குழாய் குழந்தை மற்றும் மகப்பேறு மருத்துவ சிகிச்சைநிபுணரான டொக்டர் கமலா செல்வராஜ், பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்க ளையும் அதை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு முறைகளைப் பற்றியும் www.medicalonline.inல் விரிவாக பகிர்ந்து கொள்கிறார்.

கர்ப்பம் தரிப்பது - தாய்மைப்பேறு அடைவது - ஒரு பெண்ணிற்கு கிடைத்தற் கரிய சுகங்களில் ஒன்று. அந்த சுகத்தில் வயிற்றில் கருவை சுமப்பதுடன் மனம்... பல கனவுகளையும், கற்பனைகளையும்  சுமப்ப துண்டு. ஆனால்.... அவை அனைத்தும் சிலருக்கு கலைந்து சிதறும் நிலை உருவாகுவதும் உண்டு. கரு கலைந்து விடும் நேரத்தில் பெண்ணின் மனதில் உருவாகும் நிலையை வார்த்தைகளால் விவரித்திட இயலாது.  கர்ப்பப் பையில் கருத்தரித்த கரு, 28 வாரங்களுக்குள் கலைந்து கர்ப்பப் பையை விட்டு வெளியேறுவதைத்தான் கருச்சிதைவு என்கிறோம்.

இந்த கருச்சிதைவு வெவ்வேறு வகைகளில் ஏற்படுகிறது. முதலாவதாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுவதுடன் இரத்தப்போக்கும் அவ்வப்போது சிறு துளிகளாக வெளிப்படும். மூன்று மாதங்களுக்குள் ஏற்படும் இது போன்ற நிலையால் பயப்படத் தேவை யில்லை.  ஆனால் இந்த நிலையில் மருத்துவரை உடனே அணுகுதல் நல்லது. இந்நிலையில் படுக்கை யிலேயே ஓய்வெடுக்கச் செய்து சிகிச்சை செய்ய லாம் தேவைப்பட்டால் புரொஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்களை செலுத்தியும் சிகிச்சை செய்யலாம்.

சிலசமயம் வயிற்றுவலி இல்லாமல் இரத்தப்போக்கு மட்டும் ஏற்படுவது உண்டு. குடும்பத்தில் வழிவழியாக ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப நிலையிலேயே முதல் சில மாதங்களுக்கு இரத்தப்போக்கு இருப்ப துமுண்டு. எந்த நிலையிலும் மருத்துவரை உடனே அணுகுதல் அவசியம்.

கர்ப்பிணிப் பெண்களில் சிலர் எளிதில் உணர்ச்சிவசப்படுவது உண்டு. அந்நிலையி லும், கவலை, சந்தோஷம் ஆகிய நிலையி லும், உணர்வுகளுக்கு ஆளாகும் போதும் உடல் நெகிழ்ந்தால் கருக்கலைய வாய்ப் புண்டு. இதைத் தவிர்க்க... மனம் அமைதிப் பட, உடல் ஓய்வாக இருக்க சற்று தூக்கம் வருமளவு மருந்து கொடுக்கலாம்.

கர்ப்பத்தைத் தாங்கும் பை,  ஆரோக்கிய மாக இருக்கிறதா என்பதை ஒலியலைக் கருவி மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஒருவாரம் கழித்து ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலமும் கர்ப்பநிலை ஆரோக்கியமாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் சில கர்ப்பிணிப் பெண்ணிற்கு தாங்க முடியாத அடிவயிற்று வலி ஏற்படுவ துடன் இரத்தப்போக்கும் ஏற்படும். பரிசோதித்துப் பார்த்தால் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி திறந்திருக்கும். எப்பொழுது கருப்பை வாய் திறந்து விட்டதோ அதற்குமேல் கருகலைந்து வெளிவருவதைக் கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகி விடும். இதற்கு மேல் தாமதிக்காமல் உடனே மருத்துவரின் ஆலோசனையை அணுக வேண்டும். தொடர்ந்து ஏற்படும் இரத்தப் போக்கினால் இரத்த சோகை ஏற்படவும் வாய்ப் புண்டு.

உடனே கலைந்த கருவை வெளியேற்று வது தான் ஒரே வழி. சிகிச்சைக்கேற்றவாறு மருந்து கொடுத்தோ - இலேசான மயக்க மருந்து கொடுத்தோ கலைந்த கருவை முற்றிலும் அகற்றவேண்டும்.

கரு சிதைவுக்குப் பின், பெண்கள், இரண்டு - மூன்று நாட்கள் படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இரத்த சோகைக்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

கருச்சிதைவுக்குப் பின் ஒரு மாதத்திற்கு ஆரோக்கியமான நிலை உருவாகும்  வரை ஓடியாடித் திரியாத வேலைகளையே செய்யவேண்டும்.

அடுத்தமுறை சீராக மாதவிடாய் வரும் வரை உடலுறவு மேற்கொள்ளக் கூடாது.

மூன்று மாதங்களுக்காவது மீண்டும் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை முழுமையாக பின்பற்றினால் தான் அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும். அதே தருணத்தில், தவிர்க்க இயலாத கருச்சிதைவில் ஏற்படும் அறிகுறிகளுடன் கர்ப்பத்தில் தாங்காத நிலையில் கரு கலைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். இந்நிலையிலும் கர்ப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. கர்ப்பத்தை பாதுகாக்க இயலாத நிலையில் சிதைந்த கருவை வெளியேற்றுவது தான் சரியான சிகிச்சை. இது போன்ற தருணங்களில்,  இரத்தப்போக்கு அதிகமாக இருப்பின் பதிலுக்கு இரத்தம் ஏற்ற வேண்டும். கருச்சிதைவுக்குப் பின் இவர்களும் மேற்சொன்னதை கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.

இன்னும் சிலருக்கு, கரு வயிற்றிலேயே இறந்து விட்ட பின்பும் தங்க நேரிடும். இதனை மருத்துவ உலகில்  தவறிவிட்ட கருச்சிதைவு என்று குறிப்பிடு கிறோம். இது கர்ப்பம் தரித்த நான்கிலிருந்து எட்டு வாரத்துக்குள் ஏற்படும்.

 பொதுவாக, கர்ப்பம் தரித்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அதை உறுதி செய்து கொள்ள மருத்துவரை நாடும் போதும், பரிசோதனைக் குள்ளாகும்போதும், கர்ப்பம் சிதைந்திருந்தால் எளிதில் கண்டு பிடித்து விட முடியும்.   

அடிவயிற்று வலியைத் தொடர்ந்து இரத்தப்போக்கும், கர்ப்பத்தில் உருவான கரு முழுவதும் வெளிப்பட்டும் இருக்கும். சிலருக்கு கர்ப்பப்பையின் வாய் மூடியிருப்பதுபோல் தோன்றும். ஆனால் ஒலி அலைக்கருவி மூலம் பரிசோதித்தால் கர்ப்பப்பை காலியாகயிருப்பது தெரியும். இதற்கான சிகிச்சையில்,  மருந்து கொடுப்பதுடன்,  கருச்சிதைவைத் தொடர்ந்து கவனமாக மேற்கொள்ள வேண்டிய கருத்துக்களை பின்பற்றுமாறு அறிவுரை வழங்குவோம். இந்த நிலையில்  டி - சி எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியமில்லை.

வேறு சிலருக்கு அடுத்தடுத்து மூன்று, நான்கு முறை கருச்சிதைவு ஏற்படும். அவர்களுக்கு மனக்கவலையால், உணர்ச்சிவசப்படுவதால் இச்சிதைவு ஏற்படுகிறது. இத்தகைய தன்மை உடையவர்களை மென்மையாகவும், கவனமாகவும் கையாள வேண்டும்.

 கருச்சிதைவு ஏற்படுவதற்குரிய காரணங்களைப் பல்வேறு பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ளும் வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கவேண்டும். காரணத்தை கண்டுபிடித்தபின் அச்சூழ்நிலை நேர்வதைத் தவிர்ப்பதுடன் கர்ப்பம் அடைய லாம். இத்தகைய கர்ப்பிணிப் பெண்களை கர்ப்பம் அடைந்த முதல் நாளிலிருந்து பிரசவ நேரம் வரை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையில் கருவுடன் சவ்வுகளும் சேர்ந்து ஒரு சிலருக்கு திரும்பத் திரும்ப வெளியேறும். 12-வது வாரத்திலிருந்து 14-வது வாரத்துக்குள் இது நேரிடும். கர்ப்பப்பைக்கு கருவைத் தாங்கும் வலு இல்லாததாலும், பையின் வாய் பலவீனமாக இருப்பதாலும் இப்படி நேரிடுகிறது. இத்தகைய வாய்ப்பு உள்ள கர்ப்பிணிப் பெண்ணை படுத்த படுக்கையில் வைத்து கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியை கட்டி வைத்து கவனமாக பிரசவ நேரம் வரை காப்பாற்றுகிறோம்.

பிரசவவலி வந்தவுடன் மருத்துவ மனையில் மருத்து வரை உடனே அணுகிட வேண்டும். இல்லாவிட்டால் பிரசவ வலியின் அவதியால் கர்ப்பப்பையின் வாய் கிழிய நேரிடும். இதனால் கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கு ஏற்படும்.

கருச்சிதைவு - கசப் பான விஷயம்தான். சிதைந்த நிலையில் சரி யாக உருப்பெறாத நிலையில் உள்ள கருவை சுமப்பதால்... ஆயுள் முழுவதும் கசப் பும் போராட்டமுமாக அல்லவா முடியும். அதை விட களையாக - கசப்பாக முளைத்த கருவை ஆரம்பத்தி லேயே களைவது, கசப்பை, பாரத்தைக் குறைக்குமல்லவா? இதற்காக இயற்கையா கவே உருவாகும் வரம் தான் கருச்சிதைவு. இதனால் கருச்சிதைவு நேரிட்டதை நினைத்து... பெண்கள் கவலைப்படுவது, குறைபட்டுக் கொள்வது மிக மிகத் தவறு. சரிவர உருப் பெறாத கருவை சுமந்து பிரசவித்து, காலமெல் லாம், நெஞ்சிலும், கையிலும் பாரத்தை சுமப் பதில் என்ன சுகம் இருக்கிறது. இதை... ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண் டியது அவசியம்.

 எனவே கரு சிதை விற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதனை தவிர்ப்பதற்காக நாங்கள் பரிந்துரைக்கும் முறைகளை கையாண் டால் இதிலிருந்து மீண்டு விடலாம்.

முட்டை நிலையி லேயே ஏற்படும் தவறான விளைவுகள், குரோமோசோம் எண்ணிக் கையில் ஏற்படும் வேறுபாடு - பாலிப்ளாய்டி (Polyploidy) , அன்யூப்ளாய்டி (Aneuploidy), ட்ரைசோமி (Trisomy), மோனோ சோமி (Monosomy), போன்ற குறைபாடு களில் குரோமோசோமின் இனக் கீற்றில் ஒரு புதிய பகுதியே காணாமல் போய்விடும். குரோமோசோம் எண்ணிக்கை 46, ஆடோஸோமின் எண்ணிக்கை 45-ம் ஒரு செக்ஸ் குரோமோசோமும் இருக்க வேண்டும். செக்ஸ் குரோமோசோம் XX என்றிருந்தால் பெண் குழந்தையும், XY என்றிருந்தால் ஆண் குழந்தையும் உருவாக வாய்ப்புண்டு. குரோமோசோம் எண்ணிக் கையை - தன்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்வது கருச்சிதைவிற்கான காரணங் களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

 தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க கருச்சிதைவு வாய்ப்பும் அதிகமாகும்.

 கருவுற்ற தாய், மாடு, கிளி போன்ற வையுடன் நெருங்கிப் பழகவேண்டிய சூழ்நிலையில், அவைகளிடமுள்ள சில நோய் கள் காரணமாகவும் கருகலைய நேரிடலாம்.

காசநோய், ஹைபர்டென்ஷன், சர்க்கரை வியாதி, இதயநோய் உள்ளவர்களுக்கும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம்.

ஹைபோதைராய்டிஸம், ஹைபர்தைராயிடிஸம், சர்க்கரை நோய், புரொஜெஸ்டிரான் சுரப்புக் குறைவு, ஊட்டச் சத்துள்ள ஆகாரங்களை உண் ணாமல் இருத்தல், மசக்கை அதிகமாகி அடிக்கடி வாந்தி எடுத்தல். போதை மருந்துகளும் - மயக்கத்தை அளிக்கவல்ல சூழ் நிலைகளும் - புகை பிடித்தல், கதிர் வீச்சு, கர்ப்பத் தடை மாத்திரையை சரிவர உட்கொள்ளாமலிருப்பது. மயக்க மளிக்கவல்ல காற்றை சுவாசிப்பது.

கால தாமதமாகி இணைந்த கருமுட்டையும், உயிர் அணுக் களிலும் உருவாகும்  கரு முட்டையோ, உயிர் அணுவோ உடலிலிருந்து விடுபட்ட 12 - 24 மணிநேரத்துக்குள் இணைய வேண்டும்.

லாபரோடமி - கர்ப்பநிலை யின் ஆரம்ப காலத்தில் வயிற்றைக் கிழித்து செய்யும்  அறுவை சிகிச்சை,

அதிர்ச்சியில் உடல் அல்லது மனதில் ஏற்படும் சோர்வு, நெருங் கியவர்களின் மரணம், விபத்து பற்றிய செய்திகளை கேள்விப் படுவது. கர்ப்பப்பையின் குறைபாடு கள்-வளர்ச்சியடையும் போது கர்ப்பப்பையில் ஏற்படும் குறைபாடுகள், இழைநார்த் தோற்றம் வாய்ந்த கர்ப்பநிலை, கர்ப்பப்பையின் உள் பாகத்தில் பிளப்பற்ற பரப்பிணைவு, அதிகமாக புகை பிடிப்பதாலும், குடிப்பழக்கத்துக்கு மேலும், மேலும் ஆளாவதாலும்,  விந்துவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை மாறுபட்டாலும், அடுத்தடுத்து கருச்சிதைவு நேரிட வாய்ப்புண்டு.

தொடர்புக்கு: +91 44 28272675