அறியாமல் செய்யும் தவறுகள் மலட்டுத்தன்மைக்கு காரணமாகின்றன

  • Dr.S.Chitra
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
அறியாமல் செய்யும் தவறுகள் மலட்டுத்தன்மைக்கு காரணமாகின்றன

செயன்முறைக் கருத்தரிப்பு! அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியமான திருப்பங்களில் முக்கியமானது, முதன்மையானது இந்த செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை  முறை.

மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் பெரும்பாலானவை உடல்சார்ந்த தேவைகளுக்கானவையாகவே இருக்க, உளரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பெரும்பாலானவர்களை ஆறுதல் பெருமூச்சு விட வைத்திருக்கிறது இந்தச் செயன்முறைக் கருத்தரிப்பு. தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் இதுபோன்ற செயன்முறைக் கருத்தரிப்பு மையங்களில் திருச்சி மாநகரில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஜனனி கருத்தரிப்பு மையத்தின் தலைமை மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர். சித்ரா அவர்களுடன் ஒரு நேர்காணல்.

நமது முன்னைய சந்ததியினருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் இடையே ஒப்பீட்டளவில், குழந்தைப் பேறு இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா? அல்லது அதிகரித்திருக்கின்றதா? அதற்குக் காரணம் என்ன?

நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் எமக்கு இந்த உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன. குழந்தைப்பேறு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, தற்போதைய தலைமுறையினரில் இருபாலாரிடமும் பொருளாதார ரீதியில் தாம் உயரவேண்டும் என்ற சிந்தனை அதிகரித்திருக்கிறது. ஆகையால், இவர்கள் முதலில் முக்கியத்துவம் தருவது தொழில் வாய்ப்புக்களுக்கே. இதனால் இன்றைய தலைமுறையினர் திருமணம் செய்துகொள்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க, குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகளும் குறைந்துகொண்டே செ ல்கின்றன. இளவயதில் திருமணம் செ ய்துகொண்டாலும் கூட, குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டுவிடுகின்றனர். அதற்காக கருத்தடை மாத்திரைகளைக் கணக்கின்றி பாவனைக்கு எடுத்துக்கொள்வோரும் உண்டு. இவை அனைத்துமே குழந்தைப் பேற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இரண்டாவதாக, இன்று நம் தலைமுறையினரிடையே காணப்படும் உணவுப் பழக்கவழக்கங்களும் இனவிருத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போஷாக்கான உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அந்த வேளைப் பசியைத் தீர்த்துக்கொண்டால் போதும் என்ற நி னைப்பில், துரித உணவுகளை அளவிற்கதிகமாக உட்கொள்வதும் இதற்குக் காரணமாகின்றது.

அடுத்ததாக, இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வரும் சுற்றுப்புறச் சூழல் மாசடைதலும், எம்மை கணிசமான அளவில் பாதிக்கின்றன. இரசாயனச் செறிவு கூடியகளைகொல்லிகளையும் அதிக விளைச்ச லுக்காகவெனப் பிரத்தியேகமாகப் பாவிக்கப்படும் விதைகள் போன்ற மூலப் பொருட்களையும் உபயோகித்து இன்று நாம் உண்ணும் காய்கறிகள், பழவகைகள் என்பன உற்பத்திசெ ய்யப்படுகின்றன. இது நம் உடலை வெகுவாகப் பாதிக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில்கூட நச்சுத்தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. இவையும் இனவிருத்திக் குறைபாட்டில் பங்கு வகிக்கின்றன.

இந்த இனவிருத்திக் குறைபாடு, ஆண்களிடமா அல்லது பெண்களிடமா அதிகமாகக் காணப்படுகிறது?

குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியினர், கணவன்-மனைவி வேறுபாடின்றித் தமது குறைகளை நீ க்கிக்கொள்வதற்கு முன்வருகிறார்கள். இது வரவேற்கத்தக ஒரு விடயம். மேலோட்டமாகப் பார்த்தால் இரு பாலாரிடமும் குறைகள் இருக்கின்றன என்று சொன்னாலும், சற்று ஆழ்ந்து அவதானிப்போமேயானால், இன்றைய தலைமுறை ஆண்களிடம்தான் ச ற்று அதிகமாகவே இந்தக் குறைபாடு காணப்படுகின்றது. இதற்கான காரணங்களில் முக்கியத்துவம் பெறுவது தொழில்ரீதியான பாதிப்புக்கள்தான். கணனிகள் முன் அமர்ந்து நீ ண்ட நேரம் தொழில் புரிவதால், கணனித் திரையில் இருந்து வெளிவரும் கதிர்கள் விந்தணுக்கள் உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இயற்கையான உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய  இடங்களில் தொழில் புரிபவர்களிடமும் இத்தகைய குறைபாடுகள் தோன்றுகின்றன.

அடுத்ததாக, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருட்களை உட்கொள்ளுதல் என்பவற்றைச் செ ால்லலாம். பொதுவாகவே போதைப்பொருட்கள் ஆண்களின் விந்து உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கின்றன. அளவுக்கு அதிகமாக புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைகள் இந்தக் குறைபாட்டுக்கு நேரடிக் காரணமாகின்றது. தற்கால நாகரீகத்தின் அடையாளமாகியிருக்கும் இறுக்கமான ஆடைகளுக்கும் இதில் பங்கிருக்கின்றது.. முக்கியமாக ஆண்கள் மிக நீ ண்டநேரம் அணிந்திருக்கும் உள்ளாடைகள், இறுக்கமான முழுக்காற்ச ட்டைகள் என்பன விந்து உற்பத்தியைப் பாதிக்கின்றன. அதுபோலவே மோட்டார் சை க்கிள்கள் இன்று இளைஞர்களின் தனித்துவமான முத்திரையாகியிருக்கிறது. இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு மோட்டார் சை க்கிள்களில் நீ ண்டதூரம் பயணிப்பதும் இளைஞர்களின் சாகச ங்களில் ஒன்று. ஆனால் இவையனைத்தும் இனவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது, இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான குறைபாடுகளுடன் உங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வரும் ஆண்களுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கிறீர்கள்?

முதலில் சிகிச்சை க்காக வரும் தம்பதியினர் இருவரையுமே இனவிருத்தி தொடர்பான முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவோம். குறை யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்த பின்பு அவர்களுக்கான சிகிச்சை யைப் படிப்படியாக வழங்க ஆரம்பிப்போம். காரணம், சிலரது உடல் அமைப்புக்கு ஏற்ப, ஆரம்ப கட்ட சிகிச்சை களிலேயே அவர்களது குறைகளை நி வர்த்தி செ ய்துவிட முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரையில், அவரது விந்துவைப் பரிசோதனை செ ய்தாலேயே அவரிடம் குறைகள் இருக்கின்றனவா? அப்படியாயின் என்ன குறைபாடு என்பன குறித்து முடிவுக்கு வந்துவிட முடியும்.

பொதுவாகப் பார்ப்போமேயானால் ஆண்களிடம் விந்துவை உற்பத்திசெ ய்வதற்கு மூளையில் இருந்து வரும் கட்டளைகள் தடைப்படக்கூடும். அதனால் விந்து உற்பத்தி குறைவடையலாம். இதனால் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை போன்ற குறைபாடுகள் தோன்றலாம். இதற்கு மாத்திரைகள் மூலமே சிகிச்சை  அளிக்க முடியும். அல்லது விந்துவில் இருக்கக்கூடிய உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சில ஆண்களின் விந்துவில் காணப்படும் உயிரணுக்களில் வீரியம் சற்றுக் குறைவாக இருந்தாலும் நீ ந்தும் தன்மையில் எதுவிதக் குறைபாடுகளும் இருக்காது. அப்படியானவர்களின் உயிரணுக்களுக்கு வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு மாத்திரைகள் மூலம் சிகிச்சை  அளிப்போம். அதிலும் பிரதிபலன்கள் இல்லாதவிடத்து IUI என்கிற சிகிச்சை முறையைப் பிரயோகிப்போம். ஆணின் விந்துவில் இருந்து சற்றே வீரியம் மிக்க உயிரணுக்களைப் பிரித்தெடுத்து, அதனுடன் புரதம், குளுக்கோஸ் போன்ற சக்திப் பதார்த்தங்களைச் சேர்த்து, வடிகட்டி, அதிலிருந்து வீரியம் மிக்க உயிரணுக்களை பெண்ணின் கருமுட்டைப் பைக்குள், கருமுட்டை வெடிக்கும் காலத்தில்  செலுத்துவோம்.

இதை மாதத்திற்கு ஒரு தடவை மட்டுமே செய்யமுடியும். இது ஒரே தடவையிலும் பலனளிக்கலாம் அல்லது நான்கைந்து முறைகள் செ ய்யும்போது பலனளிக்கலாம். ஆனால் மருத்துவக் கொள்கைகள் அடிப்படையில் ஆறு தடவைக்கு மேல் இது பலன் தராவிட்டால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடலாம். இன்னும் சிலரது விரைப்பையில் இரத்த நாளங்கள் சுற்றியிருப்பதால், இரத்தச் சுற்றோட்டம் நி கழாமல் இரத்தம் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் விரைப்பையின் வெப்ப அளவு அதிகரிக்கிறது. உயிரணுக்களின் உற்பத்தியில், வெப்பநி லை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது இயற்கையான உடல் வெப்பம்  விந்து உற்பத்திக்குத் தேவையானதைவிட அதிகமாக, ஒரு தடையாக இருக்கும் என்பதால்தான், இயற்கையே விரைப்பையை உடலுக்கு வெளியில் வைத்திருக்கிறது.

இரத்தம் விரைப்பையிலேயே தங்கிவிடும்போது விரைப்பையின் வெப்பம் அதிகரிக்கும். இதனால் உயிரணுக்கள் செயலற்றுப் போகின்றன. அதுபோலவே, விரைப்பையில் இருந்து விந்தணுக்கள் இரத்தத்துடன் வந்து சேரும் நரம்பு சில ஆண்களுக்கு பிறவியிலேயே இல்லாதிருக்கும் அல்லது தடைப்பட்டிருக்கும். ஆண்களுக்கு செ ய்யப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை  இந்த நரம்பைத் துண்டிப்பதே ஆகும். இந்தக் குறைபாட்டை விரைப்பையைத் தொட்டுப்பார்த்தே அறிந்துகொள்ளலாம். இதற்கு ஒரு எளியமுறை அறுவை சிகிச்சையே போதுமானது. இதில் ஒருவருக்கு எந்தவிதமான குறைபாடு இருக்கிறது என்பதற்கமைய சிகிச்சை  வழங்குவோம்.

செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சையில், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சிகிச்சை முறை என்ன?

முன்பே நான் குறிப்பிட்ட IUI முறையிலேயே, புதிதாக, பெண்ணின் கருமுட்டை வெடிக்கும் 20 மணித்தியாலங்களுக்கு இரண்டு தடவை உயிரணுக்கள் செலுத்தப்படும் முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. அப்படியும்  பலனளிக்காவிட்டால் கலங்கத் தேவையில்லை. அதற்கு அடுத்த சிகிச்சை தான் IVF முறை. இதில் பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதனுடன் சுமார் 50000 உயிரணுக்களை விட்டுவிடுவோம். அதில் ஒன்று நீந்திச்சென்று கருமுட்டைக்குள் நுழையும். இதுதான் `டெஸ்ட் டியூப் பேபி\' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக Itsee என்ற சிகிச்சை  செ ய்யப்படுகிறது. இதில், தாமாக நீந்திச்சென்று முட்டையை அடைய முடியாத உயிரணுவாக இருந்தாலும் அதை எடுத்து ஒரு ஊசி மூலம் நேரடியாகக் கருமுட்டைக்குள்ளேயே செலுத்துவதுதான் இந்த சிகிச்சை . அடுத்ததாக, சில ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையிலோ, வீரியத்திலோ பிரச்சினை எதுவும் இருக்காது. ஆனால் விந்து வெளியேறுதலில் பிரச்சினைகள் இருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு விரைப்பையிலிருந்தே நேரடியாக உயிரணுக்களை எடுத்து கருமுட்டைப் பைக்குள் செலுத்தி கருத்தரிப்பை மேற்கொள்ளும் வசதிகூட இப்போது வந்துவிட்டது.

செயன்முறைக் கருத்தரிப்பில் வயது வரம்பு ஏதேனும் இருக்கிறதா?

சமுதாய நலன்கருதி வயதெல்லை ஒன்றை விதித்திருக்கிறோம். சுமார் ஐம்பது வயதை நெருங்கியவர்கள் கருத்தரிக்க விரும்பினால், அவர்களது சந்ததியினராக வரக்கூடிய குழந்தைகள் முகங்கொடுக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்துவோம்.

செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு வருபவர்கள், குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இங்கேயே தங்கியிருக்கவேண்டுமா?

இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால், கருத்தரிப்பு முறையாக நிகழ்ந்திருக்கிறதா? தாயின் உடல் நிலை திருப்தி தரக்கூடியதாயிருக்கிறதா என்பவற்றைப் பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்துகொண்டுவிட்ட பின்னரே, அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவக் குறிப்புக்களையும் வழங்கி சொந்த இடங்களுக்கு அனுப்புவோம். (நேர்கா pt src="../jscripts/tiny_mce/themes/advanced/langs/en.js" type="text/javascript"> 79;லின் இடையில், தஞ்சாவூரிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில், செயன்முறையில் கருத்தரித்த ஒரு தாய், ஆண் குழந்தையொன்றை ஈன்றெடுத்த செ ய்தியையும் கேட்கக்கூடியதாயிருந்தது.)

`வாடகைத் தாய்\' எனும் விடயம் இப்பொழுது சின்னத்திரைமூலம் பிரபலமாகிவருகிறது. அதுபற்றி...?

இதுவரை எமக்கு வாடகைத்தாய் அமர்த்தும் தேவை ஏற்படவில்லை. ஆனால், யாருக்கேனும் தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களைக் கலந்துபேசி, சட்டரீதியான ஒழுங்குகளைச் செய்வதன் மூலம் முன்னெடுத்துச்செல்ல முடியும்.

உங்கள் மருத்துவமனையில் காணப்படும் சிறப்பம்சங்களாக எவற்றைச் சொல்வீர்கள்?

இனவிருத்தி தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளையும் எமது மருத்துவமனை தன்னகத்தே கொண்டுள்ளது. நான் மேற்கூறிய அனைத்து சிகிச்சை  முறைகளும் எமது மருத்துவமனையில் இருக்கின்றன. திறமையும் அனுபவமும் நிறைந்த மருத்துவர்கள் இங்கே சேவையாற்றுகிறார்கள். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்குப் பிரதான பிரச்சனை தங்குமிட வசதி ஏற்படுத்திக்கொள்வதுதான். ஆனால் எமது மருத்துவமனையினுள்ளேயே தங்குமிட வச தியும் சிற்றுண்டிச்சாலை வசதியும் இருப்பதால் இந்தப் பிரச்சினை எங்களிடம் இல்லை. எந்த வேளையும் அவர்கள் எமது மேற்பார்வையிலேயே இருப்பதால், அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இங்கே இருக்கமுடியும்.

உங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் எத்தகைய பண்புகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பொறுமை வேண்டும். இது மந்திரத்தில் மாங்காய் பறித்துத் தரும் வித்தை அல்ல. அடுத்து மருத்துவர்களாகிய எங்களைப் பூரணமாக நம்பவேண்டும். நாம் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்வார்களாயிருந்தால் இந்த சிகிச்சையே பலனிழந்துவிடும். அடுத்தது ஒத்துழைப்பு. இந்த மூன்றும் உடையவர்களை நிச்சயமாக வரவேற்கிறோம். அவர்களது கனவை நிஜமாக்குகிறோம்.

திருச்சி, ஜனனி மருத்துவமனையின் இலச்சினையில் குறிப்பிடப்பட்டிருக்கும் `கனவு நிஜமாகும்\' என்ற வாக்கியத்தையே இறுதியாகவும் உறுதியாகவும் கூறி முடித்தார்.