கர்ப்பப்பை கட்டிகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்!

  • Dr.Madhumitha
  • Nov 30, 1999
Appointment                Doctor Opinion          
 
கர்ப்பப்பை கட்டிகளுக்கான காரணங்களும் தீர்வுகளும்!
பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படுகின்ற சிறுசிறு கட்டிகளே பிசிஓ சின்ட்ரோம் என்று அழைக்கப்படுகின்றது (Poly Cystic Ovary Syndrome - PCOS). . பெண்களின் அதிகப்படியான உடல்பருமன், உடல் உழைப்பு இல்லாதிருத்தல், மரபியல் கோளாறுகள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
 
அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள், உடல் எடையை சரியான வழி முறையில் குறைத்துக் கொண்டு ஹார்மோன் சுரப்பதை சமநிலைக்கு கொண்டு வந்தாலே பிசிஓஎஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் பருமனும் ஹார்மோன் சுரத்தலும் ஒன்றோடொன்று தொடர்பு உடையதாக உள்ளன. இந்த இரண்டில் எதில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னொன்றிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும்.
 
பிசிஓஎஸ் பிரச்சினைகளுக்கு அதிகப்படியான மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமது வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களை செய்தாலே போதுமானதாகும். 

நோய் அறிகுறிகள்:
 
தொடர்ந்து ஆறு மாத காலம் வரை ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படாமல் இருத்தல், அப்படியே ஏற்பட்டாலும் ஒன்றிரண்டு நாட்களில் நின்றுபோதல், அல்லது மாதவிலக்கானது தொடர்ந்து நிற்காமல் வெளியேறிக்கொண்டிருப்பது, திருமணமாகியும் பல வருடங்களுக்கு குழந்தையில்லாமல் இருத்தல், கர்ப்பக்காலத்தில் 90 நாட்களுக்குள் கர்ப்பம் கலைந்திடுதல், மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களிலெல்லாம் முடி வளர்தல், அதிகமாக தலைமுடி உதிர்தல் ஆகிய யாவும் பிசிஓஎஸ் நோயின் அறிகுறிகளாகும்.
 
பிசிஓஎஸ் பிரச்சினைகள் ஏற்படுத்தும் இதர நோய்கள்:
 
பிசிஓஎஸ் பிரச்சினைகளுக்கு முறையாகவும் உடனடியாகவும் சரியான தீர்வுகளை காணாத பட்சத்தில், உயர்ரத்த அழுத்த நோய், குழந்தையின்மை பிரச்சினை, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்தில், சர்க்கரை நோய், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் மற்றும் சினைப்பை புற்று நோய் ஆகியவை உண்டாவதற்கு சாத்தியக் கூறுகள் ஏற்படுகின்றன.
 
தீர்வுகள்:
 
உணவே மருந்து என்ற கருத்துக்கு இயைந்ததாக செயல்பட்டால் பிசிஓஎஸ் நோய்களை எளிதில் எதிர்கொள்ளலாம். கிரீன் டீ, பால் சேர்த்த காப்பி, டீக்கு பதிலாக பால், சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ, கிரீன் டீயுடன் ஓரளவு புதினாவையும் சேர்த் துக் கொள்ளுதல் ஆகிய வற்றை கடைப்பிடித்தால் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெரிதும் குறைக்கப்படும். அத்துடன் கிரீன் டீ பயன்பாடானது உடல் பருமனைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைத்து உடலை சுகாதாரமாக வைக்கும். மேலும் கிரீன் டீயானது இதயத்தின் சீரான இயக்கத்தையும் உறுதி செய்கின்றது. 
 
ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்பாடு:
 
கால் கப் வெண்ணீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து காலை சிற்றுண்டிற்கு முன்பாக குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், இது ரத்தத் தில் சர்க்கரை அளவை பெரிதும் குறைக்கின்றது, மேலும் இன்சுலின் தாங்குதிறனை இதுவே முறைப்படுத்தவும் செய்கின்றது. இதன் காரணமாக டெஸ்ட்ரோஸ்ட்ரான் என்கின்ற ஹார்மோன் சுரப்பு குறைக்கப்பட்டு பிசிஓஎஸ் பிரச்சினைகள் சரி செய்யப்படுகின்றன. 
 
பசலைக்கீரை / புரோகோலி
 
பசலைக்கீரையும், புரோ கோலி ஆகிய இரண்டிலும் இரும்புச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க உதவி புரியும். உடல் பருமன் பிரச்சினை இருப்பவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சினை வரக்கூடியது தான். அதன் தொடர்ச்சியாக இரத்த சோகை, முறை தவறிய மாத விலக்கு, குழந்தையின்மை பிரச்சினைகள் ஆகிய எல்லாமும் ஒன்று சேர்ந்துகொள்ளும். எனவே இவற்றை எதிர் கொள்ளும் விதமாக பசலைக் கீரையையும் புரோகோலி யையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பிசிஓஎஸ் பிரச்சினைகள் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

வெந்தயம்
 
மூன்று டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டீஸ்பூன் தேனு டன் உட்கொள்ள வேண்டும். அதே போல் மதிய உணவிற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் இரவு உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் சாப்பிடலாம். இவ்வாறு வெந்தயத்தை ஊற வைத்து உட்கொண்டால், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolic changes) துரிதப்படுத்தும் சக்தியை கொண்டது வெந்தயம். அத்துடன் ரத்தத்தின் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும் உடல் பருமனை குறைப்பதற்கும் இது பெருமளவில் உதவும். இதன் காரணமாக பிசிஓஎஸ் பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும்.
 
பழங்களும் காய்கறிகளும்
 
பிசிஓஎஸ் பிரச்சினை களை முடிந்தளவில் கட்டுக்குள் வைப்பதற்கு, ஒவ்வொரு நாள் உணவிலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மதிய உணவுடன் கொழுப்பு சத்துக்குறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மதிய உணவிற்கு பின்பு உறங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
 
ஹோமியோபதி மருத்துவம்
 
ஹோமியோபதி மருத்துவர் சாமுவேல் ஹனிமன் என்பவரால் 1796-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்றுமுறை ஜெர்மன் மருத்துவமாகும். ஹோமியோபதி மருத்துவமுறை என்பது ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்கின்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும். ஒரு மருந்து எதை உருவாக்குகிறதோ, அதை முழுமையாக போக்கக்கூடிய நீக்கக்கூடிய தன்மையும் அதனுள்ளே கொண்டுள்ளது என்பதே ஹோமியோபதி மருத்துவமாகும். இதுவேதான் ஹோமியோபதியின் தத்துவமான “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்” என்பதாகும். ஆகவே உணவு கட்டுப்பாட்டோடு ஒருவர் பக்க விளைவில்லாத ஹோமி யோபதி மருந்தை உட்கொண்டால் பிசிஓஎஸ் என்ற நோய் பிரச்சினைகளை மிக எளிதாக குணப்படுத்த முடியும்.
 
மேலதிக விபரங்களுக்கு டாக்டர் மதுமிதா, டாக்டர் மதுஸ் ஹோமியோ கேர், மதுரை, அலைபேசி - 8939266767