நரம்பியல் கோளாறுகளுக்கு நவீன சிகிச்சை

  • Dr.Sivakumar
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
நரம்பியல் கோளாறுகளுக்கு நவீன சிகிச்சை

இதய நோய், நீரிழிவு வரிசையில், உயிருக்கு ஆபத்தை விளை விக்கும் இன்னொரு காரணி Brain attack எனப்படும் மூளைப்பாதிப்பு.

இதற்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்திலான `ட்ரான்ஸ்க்ரானியல் டொப்ளர்\' என்ற கருவி எவ்வகையிலான தீர்வைத் தருகிறது என்பது குறித்து, இத்துறையின் நிபுணரும், நரம்பி யல் துறை மருத்துவரும், சென்னையில் இயங்கி வரும் செரிப்ரோ வாஸ்குலர் மற்றும் வாஸ்குலிட்டீஸ் ஆய்வு மையத்தின் நிர் வாக இயக்குநருமான பேராசிரியர் எம்.ஆர். சிவகுமாரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.


ப்ரெய்ன் அட்டாக் மற்றும் மூளை நரம்புகள் தொடர்பான செயற்பாடுகளை கண்காணிப்பதில் டி.சி.டி கருவியின் செயற்பாட்டை விவரியுங்களேன்?

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு, அவர்களுடைய மூளையில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ப தையும், எம்மாதிரியான பாதிப்பு ஏற்பட்டி ருக்கிறது என்பதையும் கண்டறியும் கருவி தான் டி.சி.டி. (Transcranial Doppler). பாதிப்பைக் கண்டறிவதுடன் மூளைப்பகுதியில் உள்ள தமனிகளில் தற்காலிகமாக இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டிருந்தால், அதனை சீராக்கவும் இந்தக் கருவி பயன்படுகிறது. ஆனால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள், பாதிப்பு ஏற்பட்ட மூன்று மணித்தி யாலத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை யை மேற்கொள்ள வேண் டும். இல்லாவிட்டால் மூளையின் சில பகுதி யில் நிரந்தரப் பழுது ஏற்படலாம். எம்மில் பலருக்கு கை, கால் திடீரென்று மரத்துப் போகலாம். கை, கால் விளங்காமல் போக லாம். திடீரென்று பார்வை மங்கலாம் அல் லது திடீரென்று தலைவலி ஏற்பட்டு, தலை சுற்றிக் கீழே விழ நேரிடலாம். இத்தகைய அறிகுறிகளை ப்ரெய்ன் அட்டாக் என்றும், பக்கவாதம் என்றும் குறிப்பிடுகிறோம். ஆனால் இத்தகைய அறிகுறிகள் தோன்றி கை, கால் செயற்பட முடியாமல் போனால், தங்களுக்கு பாரலைஸ் அட்டாக் வந்திருக் கிறது என்றும், இதற்கு அலோபதியில் சிகிச்சை  இல்லை என்றும் கருதி மாற்று மருத்துவத்தை அதாவது எக்ஸ்டேர்னல் மசாஜ், தெரபி என்ற சிகிச்சை  மீது நம் பிக்கை வைக்கிறார்கள். இது தவறானது. தற் போது அலோபதியிலும் இதற்கான சிறப் பான மருத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.

மூளையில் உள்ள இரத்த ஓட்டத்தின் அளவைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப் பட்ட இந்த டி.சி.டி என்ற கருவியின் மூலம்,  மூளையில் உள்ள தமனிகள் ஒருங்கிணை யும் பகுதிக்கு, கபாலத்தின் வழியாக, அல்ட்ரா சவுண்ட் கதிர்கள் அனுப்பப்படு கின்றன. இந்தக் கதிர்கள், ஊடுருவிச் சென்று, மூளையின் எந்தப் பகுதியில் இரத்த ஓட்டத் தடை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிகிறது. அதன்மூலம் எத்தகைய சிகிச்சை  தேவை என்பதும் உறுதிப்படுத்தப் படுகிறது. அதேபோல் ஏற்கனவே பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை  பெற்ற வர்களுக்கு, அவர்களின் இரத்தக் குழாயின் செயற்பாடுகளையும் இதன்மூலமே கண்ட றிய இயலும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோத னையை விடத் துல்லியமானது. யாருக்கா வது தலைவலி வந்தாலோ, தலைவலி தொடர்ந்தாலோ, அல்லது ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இத்த கைய பரிசோதனையை மேற்கொண்டு, தங் களின் மூளையில் இயங்கும் இரத்தக் குழா யின் இயல்பான அளவையும், அதன் மாறு பாட்டையும் இனங்கண்டறியலாம். இந்தக் கருவி எடுத்தாளுவதற்கு எளிமையாக வடி வமைக்கப்பட்டிருப்பதால், தலையில் அடி பட்டு, சத்திரசிகிச்சை  மேற்கொள்ளும் போது, இதனை இணைத்துவிட்டால், மூளை யின் இரத்தக் குழாயைக் கண்காணிக்க இய லும். இதனால் சத்திர சிகிச்சை  நிபுணர்கள் பாதிக்கப்பட்ட இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை  வழங்க இயலும். இத யத் துடிப்பின் சமச்சீரான தன்மை மற்றும் மாறுபாடு, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகம் ஆகியவற்றைக்கூட இதன்மூலம் துல்லியமாகக் கணக்கிட முடி யும். இதற்கான கட்டணம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையை விடக் குறைவே.

ப்ரெய்ன் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணங்கள் என்னென்ன?


உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனை விட முதுமையின் காரணமாகவே இவை அதிகமாக வருகின்றன. எண்பத் தைந்து வயதைக் கடந்த இரண்டு சதவீத மக் கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மார டைப்பு ஏற்படுவதற்கான அனைத்துக் கார ணங்களும் இதற்கும் பொருந்தும். மது, போதை, பாக்கு, கொழுப்பு அதிகமுள்ள உணவு, உடற்பயிற்சியின்மை, உடற்பருமன் ஆகியவை இதற்குக் காரணமாகின்றன.

பொதுவாக ஆண்களின் இடுப்பளவு நாற்பது அங்குலங்களுக்கு மிகாமலும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தெட்டு அங்குலங்களுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம். ஹோமோசெஸ்ட்ரின் என்ற பொருளின் அளவு உடலில் அதிகரித்தாலும் ஸ்ட்ரோக் வரும். இதயத்துடிப்பின் சமச் சீரற்ற தன்மை நீடித்தாலும் கூட ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு உண்டு. நாற்பது வயதிற்கு மேல் ஐம்பத்தைந்து வயதிற்குள் ளாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரு வதுதான் அதிகமாயிருக்குமே தவிர,  ப்ரெய்ன் அட்டாக் தாக்காது. ஆனால் ஐம் பத்தைந்து வயதைக் கடந்தவர்கள் மாரடைப் பால் பாதிக்கப்படுவதைவிட ஸ்ட்ரோக்கால் தாக்கப்படுவதுதான் அதிகம் இருக்கும்.

ஆனால், மாரடைப்பு என்ற வார்த்தை பெற்றிருக்கும் விழிப்புணர்வு ஸ்ட்ரோக் என்ற வார்த்தைக்கு கிடைக்காததால் நாங் கள் அதற்கு தற்போது ப்ரெய்ன் அட்டாக் என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.

எனவே மீண்டும் வலியுறுத்துகிறேன். யாருக்காவது முகம், தலை, கை, கால் உள் ளிட்ட ஏதேனும் ஒரு பகுதியில் வலியோ அல்லது மரத்துப்போவதான உணர்வோ இருந்தால், மூன்று மணித்தியாலத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு ப்ரெய்ன் அட்டாக்கிற்கான அறிகுறி தென்படுகிறது என்று கூறி, டி.டி.ஏ. மருந்தை உட்கொண்டால் மூளை சே தமடைவதிலி ருந்து காப்பாற்ற இயலும்.

தினமும் ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டால் பக்கவாதம் வராது என்கிறார்களே, அது உண்மையா?

அப்படி உறுதியாகக் கூறமுடியாது. ஏற் கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்ற பெண்களுக்கு, மீண்டும் பக்கவாதம் வராமல் தடுக்க வேறு சில மாத் திரைகளுடன் ஆஸ்பிரினைச் சாப்பிடுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பார் கள். மருத்துவரின் ஆலோசனைகள் இல்லா மல் ஆஸ்பிரினை எடுத்துக்கொண்டால் கடு மையான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.

பயணங்களின்போது, மனநிலை சரியில்லாத குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட்டு, மூளையில் அடிபட்டிருக்கும் தருணத்தில் டி.சி.டி. சோதனை உரிய தீர்வை வழங்குமா?


விபத்து ஏற்பட்டால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும். ஆனால் டி.சி.டி. கருவியின் பிரதான பணி, மூளையில் இயங்கும் இரத் தக் குழாயில் உள்ள அடைப்புகளைக் கண்ட றிந்து சீராக்கும். இத்தகைய இரத்தக் கசி விற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை தான் சிறந்தது.

நோயாளி கோமா நிலைக்குச் சென்று விட்டால் அதற்கு டி.சி.டி. எத்தகைய உதவியைச் செய்கிறது?

ப்ரெய்ன் அட்டாக் ஏற்பட்டு யாராவது கோமா நிலைக்குச் சென்றுவிட்டால் அவர் கள் இறந்துவிட்டதாகக் கருதாமல், மருத் துவமனைக்கு அழைத்துச் சென்று இத்த கைய பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஏனெனில் மூளைப்பகுதியின் இரத்த ஓட்டத் தில் தடை ஏற்பட்டிருந்தாலும் கூட கோமா நிலைக்குச் சென்றுவிடு வாய்ப்பு உண்டு.

அத்தகைய நிலையில் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து, டி.சி.டி. மூலம் சிகிச்சை யை வழங்கலாம். சில தரு ணங்களில் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

என்னுடைய மருத்துவத்துறை அனுபவத்தில், இறந்துவிட்டதாகக் கருதி, என்னுடைய மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட பல நோயா ளிகள் கோமா நிலையிலிருந்து மீண் டிருக்கிறார்கள். அண்மையில் கூட நீங்கள் ஊடகங்களில் ஒரு செய் தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோமா நிலைக்குச் சென்ற ஒரு நோயாளி இருபத்து மூன்று ஆண்டு கழித்து மீண்டும் தன் னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

உங்களுடைய மருத்துவ அனுபவத்தில் மறக்க இயலாதவை எவை?

1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் தான் அமெ ரிக்க சுகாதாரத் துறை டி.டி. ஏ. என்ற மருந்திற்கு அனு மதியளித்தது. அதுவரை ஸ்ட்ரோக்கிற்கு பிரத்தியேக மருந்துகள் எதுவும் இருந்த தில்லை.

1997ஆம் ஆண்டிலிருந்து இதனை நான் என்னுடைய சிகிச்சை யில் பயன்படுத்தி வரு கிறேன். மேலும் டி.சி.டி என்ற கருவியைக் கையாளுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சியையும் பெற்றேன். 1998 ஆம் ஆண்டில் கை, கால் செயற்பட முடியா மலும், பேச இயலாமலும் இருந்த ஒரு நோயாளிக்கு இந்த மருந்தினைச் செலுத்தி சிகிச்சை யளித்தேன். அவர் ஒரே வாரத்தில் கை, கால் குணமடைந்து, பேசும் திறனையும் பெற்றார். இதுவரை இனம் கண்டறியப் பட்ட நூற்றி அறுபத்தெட்டு நோயாளிக ளுக்கு டி.சி.டி. மற்றும் டி.டி.ஏ. மூலம் சிகிச் சை யளித்து, பலனடைந்த நோயாளிகள் குறித்த விவர அறிக்கையினை அண்மை யில் நடைபெற உள்ள உலக நரம்பியல் துறை மாநாட்டில் சமர்ப்பிக்க இருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில்  மருத்துவத்துறை யில் இருநூறு மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நரம்பியல் துறை சார்ந்த இந்த மருந்து மட்டுமே அறி முகப்படுத்தப்பட்டிருக்கிறது.

மன நல மருத்துவ சிகிச்சை , மூளை நரம்பியல் துறையின் ஒரு உட்பிரிவு என்று ஒரு சாராரும், தனிப் பிரிவு என்று ஒரு சாராரும் கூறுகிறார்கள். இவற்றில் எது சரி?

மூளைப்பகுதியில் உள்ள நரம்பில் ஏற் படும் பாதிப்பின் விளைவாக ஒரு சிலருக்கு நடத்தை மாற்றங்கள் ஏற்படக்கூடும். இவர்க ளுக்கு மனநல சிகிச்சை  வழங்கும் நிபுணர் களின் சிகிச்சை யை விட நரம்பியல் துறை நிபுணர்கள் சிகிச்சை  வழங்குவதே சரியென தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிக்கு மனநோய்க்கான சிகிச்சை  தேவையில்லை, நரம்பியல் மருத்துவர்க ளின் சிகிச்சை யே போதுமானது என்பத 16; மனநோய் நிபுணர்களே கண்டறிந்து, நரம்பி யல் துறை மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை  எடுத்துக்கொள்ளுங்கள் என்று நோயாளிக்கு அறிவுறுத்துகின்றனர். பல நரம்பியல் கோளாறுகள், மன நோய்க்கான அறிகுறிகளுடன் இருக்கும்.

காக்காய் வலிப்பு நீங்குவதற்குரிய தீர்வு கண்டறியப்பட்டுள்ளதா?

நிச்சயமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நவீன மருந் துகள், நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து 85 சதம் முதல் 90 சதம் வரையில் சாதகமான பலனை வழங்கிவருகிறது. மீத முள்ள பத்து சதவீத நோயாளிகளுக்கு அட் வான்ஸ் சர்ஜரி மற்றும் தெரபி செய்து, கட் டுக்குள் வைத்திருக்க இயலும். மேலும் இது பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதை யும் கட்டுப்படுத்திவிட இயலும்.

தற்போதைய ஆங்கில மருத்துவத்தில் ஸ்ட்ரோக்கிற்குத் தான் அதிகபட்சமான மருந்துகளும், நவீன சிகிச்சை களும் உள் ளன. ஒரு இதய நோயாளிக்கு எப்படி பைபாஸ் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற நவீன சிகிச்சை கள் உள்ளனவோ அதேபோல் மூளை நரம்பியலிலும் உள் ளன. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திற் கான அனைத்து நடவடிக்கைகளையும் வந்த பின் காத்துக்கொள்வதை விட இளம் வயதி லேயே பின்பற்றத் தொடங்கிவிட வேண் டும். குறிப்பாகப் பத்தொன்பது வயது முடிந் தவுடன் உடல் ஆரோக்கியத்தைப் பேணத் தொடங்கிவிட வேண்டும்.

தொடர்புக்கு: 0091 98400 17893