கண்களை காக்கும் இண்ட்ராலேஸ் சிகிச்சை

  • Dr.Arulmozhi Varman
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
கண்களை காக்கும் இண்ட்ராலேஸ் சிகிச்சை

மனிதனுக்கு உயிர் எப்படி முக்கியமோ, அதனைப்போன்று அந்த உயிரின் இயக்கத்திற்கு கண் பார்வை அவசியம்.

உலகில் மிகவும் துர்பாக்கியசாலிகள் யார் என்று அறிஞர்களிடம் வினவினால் இந்த அழகான உலகத்தை ரசிக்க இயலாத பார்வை இழப்பைக் கொண்டவர்கள் தான் துர்பாக்கியசாலிகள் என்று குறிப்பிடுவதுண்டு. இந்நிலையில் மருத்துவ உலகில் வேகமான வளர்ச்சியைக் கண்டு வரும் துறைகளில் ஒன்றான கண் மருத்துவத்  துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன சிகிச்சை முறைகளைக் குறித்து, சென்னையில் செயல்பட்டு வரும் உமா கண் மருத்துவமனையின் இயக்குநரும், கண் மருத்துவ நிபுணருமான டொக்டர் அருள்மொழிவர்மன் www.medicalonline.in ல் விளக்கமளிக்கிறார்.

உலகில் பார்வையையிழந்த ஆறு கோடி நபர்களில் மூன்று கோடி நபர்கள் கண் புரையால் பார்வையை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில் கண்புரை நோயை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது என்றும், அறுவை சிகிச்சையினால் தான் இதனை குணப்படுத்த முடியும் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள கூடியதா?

நீங்கள் குறிப்பிட்ட தகவல் உண்மை தான் என்றாலும் முதலில் கண்புரை என்றால் என்ன என்பதே தெரியாத வாசகர்களுக்காக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதாவது நமது கண்ணில் உள்ள கருவிழிக்குப் பின்னால் லென்ஸ் என்ற கண்ணாடி போன்ற ஒரு பொருள் இருக்கிறது. இந்த லென்ஸ்,  ஒளி ஊடுருவும் தன்மையை இழந்து வெளிர் நிறமாக மாறுவதால், லென்ஸ் வழியாக ஒளி உள்ளே செல்வது பாதிக்கப்படுகிறது. இதனால் பார்வை மங்கத் தொடங்குகிறது. படிப்படியாக பார்வை மங்கிக்கொண்டே வந்து, கடைசியில் கண் பார்வை தெரியாத நிலை ஏற்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நமது தலைமுடி வயதானால்  எப்படி நரைத்து விடுகிறதோ அதே போன்று, முதுமையினால் கண்ணில் ஏற்படும் கோளாறு தான் புரை.

பார்வை மங்குவது, கண்ணின் முன்னால் ஒரு திரை இருப்பது போல் தோன்றுவது, வெளிச்சத்தைப் பார்க்கும் போது கண் கூசுவது, இரட்டை உருவங்களாகத் தோன்றுவது இவைகளெல்லாம் கண் புரை இருப்பதற்கான  அறிகுறிகள். இந்த அறிகுறிகள் வந்த பிறகாவது அருகிலுள்ள தரமான கண் மருத்துவரை தவறாமல் அணுகுங்கள். அல்லது எங்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்.

பொதுவாக ஐம்பது வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கும், மிக அபூர்வமாக பிறவியிலேயேயும் சிலருக்கு, கண்ணில் எதிர்பாராதவிதமாக அடிபடுவதாலும், கண்ணீர் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை வியாதியினாலும் கண் புரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதே போல் ஸ்டீராய்டு என்ற ஊக்க மருந்துகளை அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் கூட இவை வருவதற்கு சாத்திய கூறு உண்டு. இதற்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிப்பது பலனை தராது.

கண்புரைக்கு முதலில் தையல் போட்டு ஐ. ஓ. எல் பொருத்தும் முறை என்ற அறுவை சிகிச்சை மூலமாகத்தான் சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் படி கருவிழியில் பத்து மில்லிமீட்டர் அளவிற்கு துவாரம் போடப்பட்டு, புரையை நீக்கி விட்டு ஐ. ஓ. எல் என்ற லென்சை பொருத்துவார்கள். அதன் பிறகு அந்த துவாரத்தை தையல் போட்டு மூடிவிடுவார்கள். இம்முறையில் நோயாளி குணமாக ஒரு மாதத்திற்கு மேலாயின. முழு வெற்றியும் கிட்டவில்லை. இந்த நிலையில் தையல் இல்லாமல் நவீன முறையில் பேக்கோ என்ற அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையின படி, கருவிழியில் மூன்று மில்லிமீட்டர் அளவிற்கு சிறியதாக துவாரமிடப்பட்டு, அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளை செலுத்தி புரை படிந்த லென்ஸ் அப்புறப் படுத்தப்படுகிறது. பிறகு ஐ. ஓ, எல் லென்ஸ் பொருத்தப்பட்டது, இம்முறையின் மூலம் தையல் போடப்படுவது கைவிடப்பட்டது. மேலும் நோயாளி இரண்டு மூன்று தினங்களிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பி, தன் பணிகளில் ஈடுபடலாம் என்ற நிலை ஏற்பட்டது.  பார்வையும் இயல்பான நிலைக்கு வந்தடையும். ஆனால்  தற்போது இதனை விட  ்கோல்ட் பேக்கோீ  எனப்படும் நவீன சிகிச்சையினை நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால்  நோயாளி,  அறுவை சிகிச்சைக்கு பின் கண்ணாடி அணிய தேவையில்லை.  படிப்பதற்கும், கொம்பியூட்டரில் பணியாற்றுவதற்கும்  கூட கண்ணாடி அணிய தேவையில்லை. காரணம் அறுவை சிகிச்சையின் போது மல்டி போகல் ஐ. ஓ. எல் லை நாங்கள் பொருத்துகிறோம்.

ஹைபர்மெட்ரோமியா, மயோபியா, அஸ்டிக்மேடிசம் ஆகியவற்றைத்  தடுக்க முடியாதா?

நீங்கள் குறிப்பிடும் மூன்றும் நோயல்ல என்பதை முதலில் சொல்லிவிடுகிறோம். ஏனெனில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, சமச்சீரற்றப் பார்வை ஆகிய மூன்றும் நமக்கு அளிப்பது ஒரு வகை குறைபாடுதான். அதனை  நாங்கள் இப்படி தான் குறிப்பிடுகிறோம். இதனை விட்டமின் மாத்திரைகளாலோ அல்லது மருந்துகளாலோ குணப்படுத்த முடியாது. இதற்கு கண் மருத்துவரிடம் சென்று, கண்ணை பரிசோதனை செய்து கொண்டு,  அவர்கள் பரிந்துரைக்கும் கண்ணாடியை அணிவது தான் இதற்கு சரியான சிகிச்சை.  இதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளத் தவறினால் உங்கள் பார்வை பறி போக வாய்ப்பு இருக்கிறது. பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் வேண்டுமானால் லேசிக் எனப்படும் லேசர் அறுவை சிகிச்சையினை செய்து கொள்ளலாம்.  

கண்ணாடி அணிந்து கொள்வதால் சில பெண்களுக்கு திருமணம் தடை படுகிறது. ஆண்களுக்கோ பணி வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. அதனால்  கண்ணாடி அணியவும் கூடாது. அதே சமயத்தில் பக்க விளைவுகளும் ஏற்படக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கான சிகிச்சைகள் ஏதேனும் இருக்கிறதா?

இப்பிரச்சையை தற்போது நாங்கள் பத்தே நிமிடத்தில் தீர்த்து வைக்கிறோம். அதுவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் அதி நவீன லேசிக் சிகிச்சையான இன்றோலேஸ் (INTRALASE) என்ற சிகிச்சையின் மூலம் நூறு சதம் குணப் படுத்துகிறோம். இந்த சிகிச்சை யினை ஒரு முறை மேற்கொள்கிற வர்கள் அதன் பின் ஆயுள் முழுவதும் கண்ணாடியோ,  லென்ஸோ  அணிய தேவையில்லை.

சையாப்டிக்ஸ் என்ற கருவியின் மூலம் லேசர் சிகிச்சை அளிக்கப் படுபவர்களில் பதினைந்தாயிரத்தில் ஒருவர் பாதிக்கப் படக்கூடிய வாய்ப்பு இருந்தது. இதனால் சிலர் இந்த சிகிச்சையினை மேற்கொள்ள பயந்தனர். மேலும் அதில் மைக்றோ கெறோடோம் (Microkeratome) என்ற பிளேடு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த இன்றோலேஸ் லேசிக் சிகிச்சையில் பிளேடு பயன்படுத்துவதில்லை. அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை மிகவும் துல்லியமானது, பாதுகாப்பானதும் கூட  அறுவை சிகிச்சை முடிந்த பத்தே நிமிடங்களில் உங்களின் இயல்பான வாழ்க்கையைத் தொடங்கலாம்.இந்தியா, பாகிஸ்தான்  உள்ளிட்ட தெற்காசியா பிராந்தியத்தில் இது போன்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஒரு சில மருத்துவமனைகளுள் எங்கள் மருத்துவமனை தான் தொடர்ந்து வெற்றி சதத்தை உறுதிப்படுத்தி வருகிறது. பதினெட்டு வயதை கடந்த அனைவருக்கும் இந்த இன்றோலேஸ் அறுவை சிகிச்சையினை செய்து கொண்டு,  வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று நலமுடன் வாழுங்கள்.

சமீபத்தில்  தமிழக நகர் ஒன்றில் கண் பார்வைக்காக  அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு காலாவதியான மருந்தை அளித்தால் அவர்களின் இயல்பான பார்வை பறிபோய்விட்டதாக ஊடகத்தின் மூலமாக ஒரு செய்தியினை கேள்விப்பட்டோம்.  இது சாத்தியமானது தானா?

காலாவதியான மருந்தை உபயோகப்படுத்தியதால் தான் கண் பார்வை பறிபோனது என்பது இது வரை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியை தரவேண்டும் என்பது தான் மருத்துவர்களின் லட்சியம்.  அவற்றில் சிலவற்றில் இது போல தவறி போய்விடுவதும் உண்டு. இது  துரதிர்ஷடவசமானது.

அவர்களுக்கு இன்ஃபெக்ஷன் ஏற்பட்டதால் தான் நிலைமை மோசமானதாக கருதுகிறேன். இருந்தாலும் இதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு மீண்டும் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன்.

தொடர்புக்கு: +91 98404 42288