மூட்டு வலிக்கு தீர்வளிக்கும் வலிமையான சிகிச்சை!

  • Dr.Arumugam
  • Feb 24, 2018
Appointment                Doctor Opinion          
 
மூட்டு வலிக்கு தீர்வளிக்கும் வலிமையான சிகிச்சை!

வாழ்வியல் முறை மாற்றங்களாலும், நாகரீக பழக்கவழக்கங்களாலும், மாறுபட்ட உணவு முறைகளாலும், மனித வாழ்க்கையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக நடப்பதும், உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும், கையினால் பல வேலைகளைச் செய்வதும்  ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகுந்த அளவில் குறைந்து விட்டன. இதனால், எலும்புகள், தசைகள் ஆகியவை வலுவிழக்கத் தொடங்கி, ஒன்றோடொன்று உராயத் தொடங்கி தேய்மானத்தை ஏற்படுத்துகின்றன. ஆர்த்தரிட்டிஸ் என்று சொல்லப்படுகின்ற கீழ்வாத நோய் இப்போது மக்களிடையே பரந்தளவில் காணப்படுகின்றது. ஆர்த்தரிட்டிஸ் என்ற வார்த்தை பலவிதமான எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் வலிகளையும் பிரதிபலிப்பதாக இருந்த போதிலும், முக்கியமாக இது மனிதர்களின் மூட்டு வலியோடு சம்பந்தபட்டதாகவே அடையாளம் காணப்படுகின்றது.

ஆர்த்தரிட்டிஸ் நோய் சம்பந்தமாக பல மருத்துவ நூல்களும், கட்டுரைகளும், ஆராய்ச்சிகளும் வரப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் நமக்கு தெரிவிப்பதென்னவென்றால், இந்த நோய் படிப்படியாக மக்களிடையே அதிகரித்து இந்த தாக்கத்துடன் கூடிய நோயாளர்களும் அதிகரித்துவிட்டார்கள் என்பதுதான். முக்கியமாக மூட்டுவலி நோயாளர்கள் மிகப்பெரிய அளவில் பெருகிவிட்டார்கள்.

அண்மையில் இந்தியா டுடே மாத இதழ் மூலமாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால் 2020-ம் ஆண்டிற்கு முன்பாக 180 மில்லியன் அளவிற்கு மூட்டு வலியால் அவதிப்படும்  நோயாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று தெரிவிக்கின்றது. அதே போல் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின்படி, 2020-ம் ஆண்டிற்கு முன்பாக ஆர்த்தரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தற்போது இருப்பதைக் காட்டிலும் 20 மடங்கு அதிகரித்து விடுவார்கள் என்று தெரிவிக்கின்றது. இன்னும் சில இந்திய ஆய்வுகள், ஆர்த்தரிட்டிஸ் நோய் தாக்குதலின் விகிதாச்சாரமானது நம்ப முடியாத அளவிற்கு எதிர்வரும் காலங்களில் உயர்ந்து போக கூடும் என்று தெரிவிக்கின்றது.

எளிமையாக்கப்பட்டு விட்ட சிகிச்சை முறையின் காரணமாக பலரும் இப்போது தங்களுடைய மருத்துவச் சிக்கல்களுக்கு சத்திரச் சிகிச்சை தான் சரியான தீர்வு என்ற நிலை வரும்போது அதனை மேற்கொள்ள இசைவு தெரிவிக்கின்றார்கள். இருந்த போதிலும் அவர்கள் முன்னிறுத்தும் ஒரே ஒரு விடயம் சத்திர சிகிச்சையின் போதும், சத்திர சிகிச்சைக்கு பின்னரும் உணரப்படுகின்ற அதீதமான வலி தான். இதற்கு முழுமையான தீர்வு காணப்பட்டு விட்டால் தயங்கும் பலரும் சத்திர சிகிச்சை செய்து கொள்ள முன் வருவார்கள். இந்த நிலையில் வலியற்ற முறையில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையினை சாத்தியப்படுத்தி வருகின்றார் டாக்டர் எஸ்.ஆறுமுகம். இவர் சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை நிபுணராக பணி புரிந்து வருகின்றார். இந்த மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ ஆலோசகராக இருந்து வரும் இவர் இந்த துறையில் 22 வருடங்களுக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளார்.

இப்போது மிகப்பரவலாக காணப்படுகின்ற மூட்டுவலி பிரச்சனைக்கு, சத்திர சிகிச்சை மட்டுமே தீர்வாகாது என்றும் மேலும் சத்திர சிகிச்சை எல்லாவிதமான மூட்டுவலி நோயாளர்களுக்கும் தேவைப்படும் ஒன்றாக இருக்காது என்றும் டொக்டர் ஆறுமுகம் தெரிவிக்கின்றார். சில நோயாளர்களைப் பொறுத்தமட்டில் தொடர் மருந்துகளின் மூலமாகவும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மூட்டு வலியானது முழுவதுமாக குணப்படுத்தப்படலாம். அதே போல் மூட்டில் செலுத்தப்படக்கூடிய சில ஊசி மருந்துகளும் செலுத்தப்பட்டு குருத்தெலும்பு திசுக்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கப்படவும் முடியும். இந்த சிகிச்சை பெருமளவிற்கு நோயாளரின் வலியைக் குறைக்கும். இதனால் சத்திர சிகிச்சையை நிரந்தரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ தள்ளிப்போட முடியும். 

மூட்டில் ஏற்படக்கூடிய அதீதமான வலி தான் நோயாளரை மருத்துவரை நோக்கி செல்ல வைக்கின்றது. இந்த காரணத்தினால் மட்டுமே நோயாளர் மருத்துவரின் கத்திக்கு பயந்து வெகுதூரம் செல்லக்கூடிய நிலையையும் உருவாக்கி விடுகின்றது. டொக்டர் எஸ்.ஆறுமுகம் அவர்களிடம் மூட்டு வலிக்காக மருந்துகளும் சத்திர சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டவர்கள் வலியிலிருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார்கள். இவரிடத்தில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பலரும் உத்திரவாதமாக வலிகள் நீங்கப் பெற்று நலமுடன் உள்ளார்கள். ஒரு பிரத்யேக காக்டெயில் இன்ஜக்சன் சத்திர சிகிச்சை சமயத்தில் மூட்டில் செலுத்துவதன் மூலமாக மிக விரைவாக வலியின்றி குணமடைய ஏதுவாகின்றது.

நோயாளர்கள் வழமையான பணிகளை விரைவில் மேற்கொள்ளவும் பாத்ரூமிற்கு பயமின்றி சென்று வரவும், படிகளில் ஏறி இறங்கவும் மற்றும் இதர நாளாந்த பணிகளைச் செய்யவும் சத்திர சிகிச்சைக்கு பின்பாக முடிகின்றது. டொக்டர் ஆறுமுகம் தையல் இல்லாத மூட்டுமாற்று சத்திர சிகிச்சையை மிகச்சிறப்பான முறையில் செய்து முடிக்கின்றார். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய காலம் மிகவும் குறைவானதேயாகும். அத்துடன் பிரசாந்த் மருத்துவமனையில் மிக உயர்தர பிசியோதெராபி துறையும் செயல்பட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலமாக மூட்டு வலி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்கள் மிக விரைவில் தம்முடைய சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிட முடிகின்றது.

டொக்டர் எஸ். ஆறுமுகம், ஆர்த்தோ சர்ஜன், அவர்கள் வருகின்ற மார்ச் 2018, 2, 3 மற்றும் 4 திகதிகளில் இலங்கையின் BMICH வளாகத்தில் அறை எண் B-20யில் காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை வழங்கயிருக்கின்றார். இந்த அரிய சந்தர்ப்பத்தை இலங்கைவாழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்புக்கு 0754000012 / 0754927080 / 0754927575