துல்லியமான மூட்டு மாற்று சிகிச்சைக்கு கம்ப்யூட்டர் அஸிஸ்டட் ரிப்ளேஸ்மென்ட்

  • Dr.Raj Kanna
  • Dec 01, 2017
Appointment                Doctor Opinion          
 
துல்லியமான மூட்டு மாற்று சிகிச்சைக்கு கம்ப்யூட்டர் அஸிஸ்டட் ரிப்ளேஸ்மென்ட்

மேலும் கூறுகையில்.. தீவிர மூட்டுத் தேய்மானத்திற்கு மேற்கொள்ளப்படும் கடைசி கட்ட சிகிச்சை முறையாகும். தொழில் நுட்ப முன்னேற்றத்தால் கம்ப்யூட்டர் மிக அதிகமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மூட்டு மாற்று சிகிச்சை முறையில் செயற்கை மூட்டின் பாகங்களை மிகச் சரியான கோணத்தில் பொறுத்துதல் வேண்டும். கம்ப்யூட்டர், அறுவை சிகிச்சை நிபுணருக்கு இப்பாகங்களை மிகத் துல்லியமாக பொருத்த உதவுகிறது. இச்சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளியின் தொடை எலும்பிலும் கால் எலும்பிலும் அகச்சிவப்பு (Infrared) ஒளி அனுப்பிகளை பொருத்தி நோயாளியின் மூட்டுவடிவத்தை கம்ப்யூட்டருக்கு சென்றடையச் செய்வார். கம்ப்யூட்டர் இவ்வடிவத்தை மின்னணு மாதிரியாக (Eleczronic Image) மாற்றி அறுவை சிகிச்சை நிபுணருக்கு செயற்கை மூட்டின் பாகங்களை சரியான இடத்தில் பொருத்த மிக துல்லியமாக வழிகாட்டுகிறது. தவறான கோணத்தில் பொருத்தப்பட்ட மூட்டு சீக்கிரமாகவே தளர்ந்து பிரச்சினைகளை உருவாக்கும். இதனை தடுக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரியான வழிமுறையை தேடி வந்தனர். கம்ப்யூட்டர் உதவியுடன் கூடிய இந்த சிகிச்சை முறை இப்பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வாக அமைந்துள்ளது. மிகச்சரியான கோணத்தில் பொறுத்தப்பட்ட செயற்கை மூட்டே முழுப்பயனைக் கொடுக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. வழக்கமாகச் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை விட கம்ப்யூட்டர், செயற்கை மூட்டின் பாகங்களை மிகத் துல்லியமாக பொருத்த உதவுவதாக உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும் போது கால் வளைவுகள் கூட மிகத் துல்லியமாக நேராக்கப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் செயற்கை மூட்டுகள் மிக நீண்ட காலம் செயல்புரியும் திறன் உடையவை.

கம்ப்யூட்டர் உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சையின் வேறு பயன்கள் அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்பும் குறைவான இரத்தப் போக்கே இருக்கும். இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. நோயாளியின் தொடை எலும்பு அல்லது கால் எலும்பு சிதைந்திருந்தாலும், அல்லது இவ்வெலும்புகளில் முன்னதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தாலோ, வழக்கமாகச் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்வது கடினம். இச்சூழலில் கம்ப்யூட்டர் உதவியுடன் மட்டுமே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும். விரைவில் குணமடைந்து ஓரிரு நாட்களிலேயே நடக்கத் தொடங்கலாம். மருத்துவமனையில் தங்க வேண்டிய நாட்கள் மிகக் குறைவு.