எலும்பு மருத்துவத்தில் ஆக்சீனியத்தின் அறிமுகம் வரவேற்கத்தக்கது!

  • Dr.Vijay Bose
  • Jan 02, 2018
Appointment                Doctor Opinion          
 
எலும்பு மருத்துவத்தில் ஆக்சீனியத்தின் அறிமுகம் வரவேற்கத்தக்கது!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சி.போஸ் அவர்களை Medical Online சார்பில் சந்தித்தோம்.

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எத்தகைய நிலையில் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது? உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதுமையடைந்தவர்களுக்கும் இது கட்டாயத் தேவையா?

உடற்பருமனுக்கும் இடுப்பு மூட்டு தேய்மானத்திற்கும் நேரடியாகத் தொடர்பில்லை. உடற்பருமனால் இடுப்பு மூட்டு தேய்வதில்லை. அதே தருணத்தில் எல்லோருக்கும் இதற்கான அவசியம் ஏற்படுவதில்லை. வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதிர்பாராமல் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் ஒரு நிலையில் இது அவசியமாகிறது. இருப்பினும் தெற்காசியாவைப் பொறுத்த வரை, ஏ.வி.என்னால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம். இந்த ஏ.வி.என். தோல் வியாதி, கண்நோய் உள்ளிட்ட பலவற்றால் பாதிக்கப்படும்போது நாம் உபயோகப்படுத்தும் மருந்துகளில் கலந்திருக்கும் ஸ்டிரொய்டினால் ஏற்படும் பின்விளைவு என்று சொல்லலாம். இவை இரத்தக் குழாய்க்குச் சென்று, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதிகமாக மது அருந்துவதன் மூலமும் விபத்தில் சிக்கிக்கொள்வதன் மூலமும் பலருக்கு ஏ.வி.என். ஏற்படும். இதனைக் குணப்படுத்த, முன்பெல்லாம் வாரத்திற்கொரு முறை என ஐந்து வாரத்திற்கு ஊசி மருந்துகளை நோயாளிக்குச் செலுத்துவோம். ஆனால் தற்போது நவீன முறையில் வீரியமான மருந்தினை ஒரேயொரு முறை ஊசி மூலம் போட்டுக் கொண்டால் போதும். பலன் கிடைக்கிறது.

முதலில் பரிசோதனை மூலம் இடுப்பு மூட்டு தேய்மானத்தின் அளவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மருந்து, மாத்திரைகளால் குணமாக்க முயல்வோம். அதற்குக் கட்டுப்படாத நிலையில், நோயாளியின் வயது மற்றும் ஒத்துழைப்பினை முன்னிறுத்தியே இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாவித்துவார நுண்ணறுவை சிகிச்சையின் மூலம், நோயாளிக்குத் துல்லியமான சிகிச்சை  வழங்கப்படுகிறது. இதிலும் தீர்வு கிடைக்காமல், எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து தேயத்தொடங்கினால், செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்துகொள்வதன் மூலம் முற்றிலுமாக இயல்பான, அன்றாட வாழ்க்கைக்கான பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள இயலுமா? முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கு மேற்கொள்ளப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  முற்றிலுமாகப் பல னளிக்கவில்லையே...!

முழு தெற்காசியாவையும் சேர்ந்த இருபாலாருக்கும் வயதாகிவிட்டால் கால் மூட்டு தேய்மானம் அடைவது என்பது மிக இயல்பானதாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பிரமுகருக்கு காலின் இரண்டு மூட்டுகளிலும் தேய்மானம் இருந்தது. அதனால் இரண்டு மூட்டுகளிலும் மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு இருந்து வந்த மூட்டுவலி முற்றிலும் குணமாகியது. ஆனால் வயதின் காரணமாக நடையில் மட்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஒவ்வொரு பெண்ணினதும் பிரசவத்திற்குப் பிறகு இடுப்புப் பகுதியில் உள்ள எலும்புகளில் தேய்மானம் தொடங்கி விடுவதாகவும் இதனால் அவர்களுக்கு நாற்பத்தைந்து வயதிலேயே இடுப்பு எலும்பிற்கான அறுவை சிகிச்சை அவசியமாகிறது என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாக உண்மையானதுதானா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் இடுப்புப் பகுதியில் மட்டுமல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது உண்மை. இதனை அவர்கள்  உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மாறிவிட்ட இடுப்புப்பகுதிகளில் பாதிப்பு அதிகம் வராமல் பராமரிக்க இயலும். ஆனால் இதற்கும் மூட்டு தேய்மா னத்திற்கும் நேரடியான தொடர்பில்லை.

இதயத்தில் நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அதன் நீடிப்புத் தன்மை அதாவது, லாங்கிவிட்டி குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகாலம் என்று மருத்துவ நிபுணர்களாலேயே வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடுப்பு எலும்பு, தோற்பட்டை எலும்பு, கால் மூட்டு எலும்பு ஆகியவற்றை மாற்றியமைத்துக்கொள்வதால், அதன் வாழ்நாள் திறன் எவ்வளவு என்பதைச் சொல்லமுடியுமா?

ஒரு காலகட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையே இதற்குப் பயன்படுத்தி வந்தோம். அதனால் அதனுடைய வாழ்நாள் திறன் பத்து அல்லது பதினைந்து ஆண்டு காலம் என்று வரையறுத்தோம். ஆனால் இன்று ஆக்சீனியம் என்ற ஒரு பொருளால் உருவாக்கப்படுவதால் இதனுடைய வாழ்நாள் திறன் இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் பழைய முறையிலான அறுவை சிகிச்சைக்குப்பின், நோயாளிக்கு உட்கார்வதிலும் நடப்பதிலும் நிற்பதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் ஆக்சீனியம் வந்தபிறகு இது போன்ற எந்தத் தடையையும் நோயாளிக்கு விதிப்பதில்லை. அத்துடன் அவர் மருத்துவமனையில் இருக்கும் கால கட்டமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சுற்றுலாவில் இம்மாதிரியான அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தாங்கள் வழங் கும் ஆலோசனைகள் என்ன?

மருத்துவச் சுற்றுலாவினைத் தீர்மானிக்கும் முன், அறுவை சிகிச்சைக்கான திகதியை, மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி உறுதி செய்துகொள்ளவேண்டும். அறுவை சிகிச்சைக்கு இரண்டு திகதிகள் முன்பாக சென்னையில் இருக்கும்படி பயணத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். விமானப்பயணம் மேற்கொள்பவர்கள், சென்னைக்கு வந்திறங்கிய அன்றே அறுவை சிகிச்சையை வைத்துக்கொள்ளக்கூடாது. சென்னைக்கு வந்து நாற்பத்தியெட்டு மணித்தியாலங்கள் ஆன பின்னரே அறுவை சிகிச்சை  செய்ய இயலும். மேலும் அறுவை சிகிச்சை  செய்துகொண்ட பின்னர் கடற்கரை யையொட்டிய விடுதிகளில் (ரிசோர்ட்ஸ்) பதினொரு தினங்கள் தங்கியிருக்கவேண் டும். இந்தத் திகதிகளில் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையை முழுமை யாகக் கடைப்பிடிக்கவேண்டும். எனவே மருத்துவ சுற்றுலாவிற்கு வருபவர்கள் இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, முழுமனதுடனும் நல்ல பலன்களுடனும் தாயகத்திற்குத் திரும்பிச் செல்லலாம்.

நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணமாக்குதல்தான் உத்தமம் என்பதன் அடிப்படையில், சாதாரண மூட்டு வலி ஏற்பட்டாலே இத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களை அணுகி, ஆலோசனை பெறுவது சரியா?

முதலில் பொது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதில் தவறில்லை. அவ ருடைய பரிந்துரையின் பேரில் நிபுணரைச் சந்திப்பதுதான் சரியான வழி. மூட்டு வலி ஏற்பட்டவுடன் நிபுணர்களைச் சென்று ஆலோசனை பெறுவதைத் தவிர்க்கலாம்.

இடுப்பு, கால், தோற்பட்டை எலும்புகளுக்கான சிகிச்சையில் லேப் இன்வெஸ்டிகேசன் என்ற மேற்கத்தேய பாணியிலான மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் பின்னணியில் வணிக நோக்கம் இருப்பதாகக் குற்றச் சாட்டு எழுப்பப்படுகிறதே?

மருத்துவத்துறையை வணிக நோக்கத்தில் பயன்படுத்தும் ஒரு சில மருத்துவ நிபுணர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் விதிவிலக்கானவர்கள். ஆனால் பெரும்பான்மையானோர் நோயாளியின் பொருளாதார சக்தியை உணர்ந்தும் நோயின் தன்மையைப் பொறுத்தும்தான் சில பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்கிறார்கள்.

மருத்துவத் துறையில் தங்களுடைய மறக்க இயலாத அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

டிரையத்லான் போட்டியின் உச்சக் கட்டப் பிரிவான அயன் மேன் டிரையத் லான் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்காவைச் சே ர்ந்த ஃபோக் என்ற வீரருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்தேன். தற்போது அவர் மீண்டும் அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார். உலகத்தர வரிசையில் பதினோராம் இடத்திலும் இருந்து வருகிறார். அதேபோல் உலகத்திலேயே, முதன் முறையாக பன்னிரண்டு வயதேயான சிறுவனுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை  செய்த அனுபவமும் உண்டு. இன்று அந்த மாணவன், மருத்துவத்தில் என்னுடைய துறையில் பிரகாசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். எழுபத்தியிரண்டு வயதான இலங்கையைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். அவர் இன்றுவரை நலமுடன் வாழ்வதாக தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.

போரினால் எலும்புப்பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்?

இரத்தக் குழாய், தோல், எலும்பு, நரம்புப் பகுதி என பல இடங்களில் பாதிக்கப்பட்டி ருந்தாலும் முதலில் அருகிலுள்ள பொது மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அவர்களின் பரிந்துரையின்படி செயற்படுங்கள்.

ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதாவது எலும்பு மருத்துவத்தில் மிகச்சரியான மற்றும் நவீன மருத்துவ சிகிச்சை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், எந்த நிலையிலும் எலும்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை  உண்டு.

இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்தவர்கள், அறுவை சிகிச் சை க்குப் பின் உறங்குதல், நிற்றல், உட் காருதல் ஆகியவற்றில் பல நிபந்தனை கள் விதிக்கப்படுகிறது. இதிலிருந்து விடு பட இயலாதா?

பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட செயற்கைப் பொருட்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இந்த நிபந்தனைகள் இருந்தது, ஆனால் தற்போது ஆக்சீனியத்தைப் பயன்படுத்துவதால் இந்த நிபந்தனை முழுவதுமாக விலக்கப்பட்டிருககிறது.

எலும்பு முறிவு தொடர்பாக மாற்று மருத்துவத்தை, குறிப்பாக புத்தூர் கட்டு அல்லது மாவுக் கட்டு எனப்படும் மருத்து வத்தை மேற்கொள்வதால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும்?

எந்தக் காரணத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும் காரணத்தை ஆராயாமல் மாவினால் ஆன கட்டினை இறுக்கத்துடன் போடுகிறார்கள். அத்துடன் எண்ணெய் போன்ற திரவத்தை அதன் மேல் ஊற்றுவதால் கட்டு இறுகுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒருசிலர் தங்கள் கைகளையே இழந்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நரம்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டலாம்.

ரூமாட்டிக் காய்ச்சலால் பாதிக்கப் படும் பன்னிரண்டு வயதுள்ள சிறுவன், மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருந்தா லும் குணமாகிவிடுவான் என்றும் ஆனால் அதே சிறுவன் முப்பது வயதைக் கடந்து விட்டால் அவனுக்கு இடுப்பு எலும்பு அல்லது கால் மூட்டு எலும்புத் தேய்மா னம் வந்துவிடும் என்கிறார்களே. இதற்கு மருத்துவ ரீதியான விளக்கம் தேவை?

ரூமாட்டிக் காய்ச்சல் வந்துவிட்டால் நம் முடைய உடலுக்குள் சில வைரஸ் கிருமி கள் வந்துவிடும். இது இருதயத்தையும் மூட் டுகளையும் தாக்கும்.  இது இருபத்தியொரு வயதிற்கு மேல் வராது என்று சொல்லலாம். அதனைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அழித்துவிட்டால் எதிர்காலத்தில் ரூமாட்டிக் ஆர்த்தரைடீஸ் வராது.

இந்த மருத்துவத்தில் எம்மாதிரி யான விழிப்புணர்வு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மூட்டுகளைப் பாதுகாக்க போதிய உடற் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே போதுமானது. அதே தருணத்தில் மூட்டுகளுக்கான பாதிப்பு எந்த நிலையிலிருந்தாலும் அதற்குச் சிகிச்சை உண்டு. தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது, கம்ப்யூட்டர் முன் நிறைய நேரம் பணியாற்றுவது போன்ற தொழில்களைச் செய்வோர் எச்சரிக்கையு டன் இருக்கவேண்டும். அதேபோல் குளி ரூட்டப்பட்ட இடத்திலேயே அதிகம் நேரம் இருந்தாலும் உடலுக்குத் தேவையான விட் டமின்-டி கிடைக்காததால்  சருமம் பாதிக்கப் படும்.

எனவே ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். உங்களுடைய உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படத் தொடங்கினால் அதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்வதுதான் புத்தி சாலித்தனம்.